......................................................................................................முழு நாலும், முழு நாளும்

பின்னூட்டங்களை வரவேற்கின்றோம்....

உங்கள் பின்னூட்டங்களை வரவேற்கின்றோம்.... ninthavurinfo@gmail.com
தினச் செய்திகள்

Monday, 26 November 2012

நாடாளுமன்ற கறிகளில் ஆசனிக் அமிலம் கண்டுபிடிப்பு

நாடாளுமன்ற உணவகத்தில் சமைக்கப்படும் கறிகளில் ஆசனிக் அமிலம் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. சமைக்கப்பட்ட கறிகளில் மட்டுமின்றி காய்கறிகளிலும் ஆசனிக் அமிலம் கலந்திருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.


உறுப்பினர்களுக்கான உணவகத்தில் வைக்கப்பட்டிருந்த உணவு வகைகளில் கொஹில கிழங்கு கறி சிவப்பாக இருந்தமையால் அதில் ஆசனிக் அமிலம் கலந்திருக்கலாம் என செய்திகள் வெளியானதையடுத்து அது தொடர்பில் ஆராய்ந்து அறிக்கையிடுவதற்காக சபாநாயகர் குழுவொன்றை நியமித்தார்.

அந்த குழுவே நாடாளுமன்ற உணவகத்திற்கு கொண்டுவரப்படும் மரக்கறிகளில் ஆசனிக் அமிலம் இருப்பதாகவும் கூடுதலான பசளைகள் பயன்படுத்தப்பட்ட மரக்கறிகளே பயன்படுத்தப்படுவதாகவும் கண்டறிந்துள்ளது.

இந்த குழுவின் அறிக்கை சபாநாயகருக்கு ஏற்கனவே அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாகவும் அது தொடர்பிலான அறிவிப்பை சபாநாயகர் இன்று விடுவார் என்றும் தெரிவிக்கப்படுகின்றது. 
(tamilmirror)

No comments:

Post a Comment

உங்கள் கருத்துக்கள் வரவேற்கப்படுகின்றன.

ADD TEXT HERE