......................................................................................................முழு நாலும், முழு நாளும்

பின்னூட்டங்களை வரவேற்கின்றோம்....

உங்கள் பின்னூட்டங்களை வரவேற்கின்றோம்.... ninthavurinfo@gmail.com
தினச் செய்திகள்

Monday, 26 November 2012

அரிசியை பதுக்கி வைத்து கூடுதல் விலைக்கு விற்போர் மீது நடவடிக்


லக்ஷ்மி பரசுராமன்
இன்று முதல் சுற்றிவளைப்புகள் தீவிரம்
அரச, தனியார் நிறுவனங் கள் வைத்திருக்கும் நெல் மற்றும் அரிசியினது அளவு குறித்து தமக்கு அறிக்கை சமர்ப்பிக்குமாறு கூட்டுறவு மற்றும் உள்ளூர் வர்த்தக அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ நுகர்வோர் அதிகார சபையின் தலைவர் ரூமி மர்சூக்கிற்கு பணிப்புரை விடுத் துள்ளார்.

இதன்படி இன்று முதல் இந்த அறிக்கை தயாரிப்புப் பணிகள் ஆரம்பமாகு மெனவும் அமைச்சர் ஜோன்ஸ்டன் கூறினார். அரிசியைப் பதுக்கி வைத்தல் மற்றும் அதன் கட்டுப்பாட்டு விலையிலும் அதிக விலைக்கு விற்பனை செய்தல் போன்ற விடயங்களில் ஈடுபடுவோர்க்கு எதிராக கடுமையான சட்ட நடவடிக்கைகள் எடுக்கவிருப்பதாகவும் அமைச்சர் ஜோன்ஸ் டன் பெர்ணான்டோ கூறினார்.
இத்தகைய செயற்பாடுகளில் ஈடுபடுவோர் எவராக இருந்தாலும் எவ்வித பாரபட்ச முமின்றி அவர்களுக்கெதிராக வழக்குகளை தாக்கல் செய்யுமாறும் அமைச்சர் ஜோன்ஸ் டன் நுகர்வோர் அதிகார சபையின் தலைவர் ரூமி மர்சூக்கிற்கு அறி வுறுத்தியுள்ளார்.
இவ்வருடம் நவம்பர் மாதத்தில் மாத்திரம் நிர்ணய விலையிலும் அதிக விலைக்கு அரிசியினை விற்பனை செய்த 100 வர்த்தகர்களுக்கு எதிராக வழக்கு தாக்கல் செய்யப்பட்டிருப்பதாக இதன் போது அமைச்சர் ஜோன்ஸ்டன் சுட்டிக்காட்டினார்.
இதேவேளை இவ்வாரம் முழு வதும் அரிசியினை பதுக்கி வைத்தி ருக்கும் வியாபாரிகளைத் தேடி சுற்றிவளைப்புக்களை முன்னெடுக்கு மாறும் அமைச்சர் ரூமி மர்சூக்கிற்கு அறிவித்துள்ளார்.
(thinakaran)

No comments:

Post a Comment

உங்கள் கருத்துக்கள் வரவேற்கப்படுகின்றன.

ADD TEXT HERE