......................................................................................................முழு நாலும், முழு நாளும்

பின்னூட்டங்களை வரவேற்கின்றோம்....

உங்கள் பின்னூட்டங்களை வரவேற்கின்றோம்.... ninthavurinfo@gmail.com
தினச் செய்திகள்

Monday, 26 November 2012

சவூதியிலிருந்து நாடு கடத்தப்பட்ட 60பேர் இலங்கை வந்தடைந்தனர்


சவூதி அரேபிய அரசாங்கத்தால் நாடு கடத்தப்பட்ட இலங்கையர்கள் 60பேர் இன்று நாடு திரும்பினர். வேலைவாய்ப்புக்களைப் பெற்றுச் சென்று அங்கு பல்வேறு குற்றச்சாட்டுக்கள் காரணமாக சிறைத்தண்டனை அனுபவித்து வந்தவர்களில் 60பேரே இவ்வாறு நாடு திரும்பியுள்ளனர். 


மட்டக்களப்பு, அம்பாறை, குருநாகல், அநுராதபுரம், பதுளை போன்ற பிரதேசங்களைச் சேர்ந்த தமிழ், சிங்கள மற்றும் முஸ்லிம் இளைஞர்களே இவ்வாறு நாடு கடத்தப்பட்டவர்களாவர்.

இவர்கள், சவூதியின் ஜெத்தா சிறைச்சாலையில் 2 முதல் 7 மாதங்கள் வரை சிறைத்தண்டனை அனுபவித்தவர்கள் என அதிகாரிகள் தெரிவித்தனர்.

கட்டுநாயக்கா சர்வதேச விமான நிலையத்தை வந்தடைந்த இவர்களிடம் பாதுகாப்பு தரப்பினர் விசாரணைகளை மேற்கொண்டதை அடுத்து அவர்கள் விடுவிக்கப்பட்டுள்ளனர். (தீபா அதிகாரி)  
(tamilmirror)

No comments:

Post a Comment

உங்கள் கருத்துக்கள் வரவேற்கப்படுகின்றன.

ADD TEXT HERE