இலங்கையில் தகவல் தொடர்பாடல் மற்றும் இலக்க முறை ஆக்கத்துறையில் புத்தாக்கங்களை கெளரவிக்கும் 2012 ஈ- சுவர்ணபிமாணி தேசிய விருதுக்காக 200 இற்கும் அதிகமான ஆக்கங்கள் கிடைக்கப் பெற்றுள்ளதென இலங்கைத் தகவல் தொடர்பாடல் தொழில் நுட்ப முகவர் நிலையம் தெரிவித்துள்ளது.
ஈ சுவர்ணபிமாணி தேசிய விருதுக்காக இம்முறை வழமைக்கு மாற்றமாக அதிகமானவர்கள் தமது இலக்க முறை புத்தாக்கங்களை விருதுக்காக சமர்ப்பித்துள்ளனர்.
ஒன்பது பிரிவுகளின் கீழ் விண்ணப்பங்களும் புத்தாக்கங்களும் கோரப்பட்டிருந்தன. ஒவ்வொரு பிரிவுக்கும் கீழ் சமர்ப்பிக்கப்பட்ட ஆக்கங்களின் எண்ணிக்கை ஈ-அரசாங்கம் மற்றும் நிறுவனங்கள் - 32 ஈ- சுகாதாரம் மற்றும் சுற்றாடல் -10 ஈ-கற்றல் மற்றும் கல்வி , 31 ஈ,பொழுது போக்கு மற்றும் விளையாட்டு , 24 ஈ - பண்பாடு மற்றும் மரபுரிமை ,4 ஈ - விஞ்ஞானம் மற்றும் தொழில் நுட்பம் , 18 ஈ -வர்த்தகம் மற்றும் வாணிபம் ,,54 ஈ - உட் சேர்க்கை மற்றும் பங்குபற்றல் ,18 எம் - உள்ளடக்கம் (கையடக்கத் தொலைபேசி உள்ளடக்கம்) ,28. ஈ - வர்த்தகம் மற்றும் வாணிபம் ஆகிய பிரிவுகளில் அதிக ஆக்கங்கள் கிடைத்துள்ளன.
ஆக்கங்கள் யாவும் மிகக் கவனமான முறையில் துறைசார் நிபுணர்களின் வாயிலாக மதிப்பிடப்பட்டு வருகின்றன. கடுமையான போட்டிக்கு மத்தியில் தெரிவு செய்யப்படுபவர்கள் ஜனவரி மாதத்தில் இடம்பெறவுள்ள 2012 ஈ- சுவர்ணபிமாணி தேசிய விருது வழங்கல் விழாவில் கெளரவிக்கப்படவுள்ளதோடு விருதுகளும் வழங்கப்படவுள்ளன.
தேசிய இலக்க முறை உள்ளடக்கங்களை விருத்தி செய்பவர்களை மேம்படுத்துவதற்காக இலங்கைத் தகவல் தொடர்பாடல் தொழில்நுட்ப முகவர் நிலையம் 2009 ஆம் ஆண்டு முதல் ஈ - சுவாபிமாணி விருதினை வழங்கி வருகின்றது.
தேசிய மட்டத்திலான ஆக்கபூர்வ இலக்கமுறை அல்லது டிஜிட்டல் பிரயோகங்களை அடையாளங்கண்டு அவற்றுக்குரிய கெளரவத்தைப் பெற்றுக் கொடுப்பது ஈ சுவர்ணபிமாணி நோக்கமாகும்.
இம்முறை ஈ-சுவர்ணபிமாணி விருது வழங்கலுக்கான விண்ணப்பங்கள் கடந்த 25ஆம் திகதி வரை ஏற்றுக்கொள்ளப்பட்டன. விருது வழங்கும் நிகழ்வை தொடர்ச்சியாக நான்காவது தடவையாகவும் இலங்கைத் தகவல் தொடர்பாடல் தொழில் நுட்ப முகவர் நிலையம் ஒழுங்கு செய்துள்ளது. (அரசாங்க தகவல் திணைக்களம்.)
No comments:
Post a Comment
உங்கள் கருத்துக்கள் வரவேற்கப்படுகின்றன.