......................................................................................................முழு நாலும், முழு நாளும்

பின்னூட்டங்களை வரவேற்கின்றோம்....

உங்கள் பின்னூட்டங்களை வரவேற்கின்றோம்.... ninthavurinfo@gmail.com
தினச் செய்திகள்

Wednesday, 7 November 2012

திருத்தங்களுடன் நிறைவேற்ற உச்ச நீதிமன்றம் அனுமதி

(thinakaran)
குற்றவியல் சட்டக்கோவை (விசேட ஏற்பாடு)

குற்றவியல் சட்டக் கோவை விசேட ஏற்பாடுகள் சட்டமூலத்தின் சில பிரிவுகள் யாப்பிற்கு மாற்றமானது எனவும், அவற்றை திருத்தங்களுடன் நிறைவேற்ற முடியும் என உச்ச நீதிமன்றம் பாராளுமன்றத்திற்கு அளிவித்துள்ளது.

மேற்படி சட்டமூலம் தொடர்பான உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பை பாராளுமன்றத்திற்கு அறிவித்த சபாநாயகர் மேலும் கூறியதாவது;
குற்றவியல் சட்டக்கோவை விசேட ஏற்பாடுகள் சட்டமூலத்திற்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டிருந்த வழக்கு தொடர்பில் உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பை பாராளுமன்றத்திற்கு அறிவிக்கிறேன். இந்த சட்டமூலத்தின் 8 ஆவது சரத்து அரசியலமைப்பின் 13 (2) பிரிவுக்கு மாற்றமானத. அரசியலமைப்பின் 84 (2) சரத்தின் பிரகாரம் இதனை நிறைவேற்ற 2/3 பெரும்பான்மை தேவைப்படுகிறது.
இருந்தபோதும் 8 ஆவது சரத்தில் திருத்தம் செய்வதினூடாக யாப்பிற்கு முரணாக உள்ள பிரிவை திருத்த முடியும். சந்தேக ஒருவரை தடுத்து வைப்பது தொடர்பில் நீதிமன்றத்தினால் வழங்கப்படும் தீர்ப்பு அல்லது உத்தரவு தொடர்பில் இந்த சட்டமூலத்தினால் பாதிப்பு ஏற்படாது.
இந்த சாத்து தவிர்ந்த சட்டமூலத்தின் ஏனைய பிரிவுகள் யாப்பிற்கு உட்பட்டதாகும்.

No comments:

Post a Comment

உங்கள் கருத்துக்கள் வரவேற்கப்படுகின்றன.

ADD TEXT HERE