......................................................................................................முழு நாலும், முழு நாளும்

பின்னூட்டங்களை வரவேற்கின்றோம்....

உங்கள் பின்னூட்டங்களை வரவேற்கின்றோம்.... ninthavurinfo@gmail.com
தினச் செய்திகள்

Wednesday, 7 November 2012

ஆசிரியர், அதிபர்கள் சங்கங்கள் கல்வி அமைச்சுக்கு எச்சரிக்கை

(ஒலிந்தி ஜயசுந்தர)(tamilmirroor)

தமது கோரிக்கைகள் தொடர்பாக ஆசிரியர் அதிபர் சங்கங்களுடன் கல்வியமைச்சர் பேச்சுவார்த்தைகளை ஆரம்பிக்காவிடின் நாட்டிலுள்ள பாடசாலைகள் இயங்காது போகுமென ஆசிரியர், அதிபர்கள் சங்கங்கள் கூறியுள்ளன.


நவம்பர் 8 ஆம் திகதிக்கு முன் சங்கங்களுடன் பேச்சுவார்த்தை நடத்துவதற்கு அமைச்சு முன் வராவிடின் தாம் வேலை நிறுத்தத்தில் ஈடுபடுவோமெனவும் நாட்டிலுள்ள 9662 பாடசாலைகளும் மூடப்படுமெனவும் பதினான்கு தொழிற்சங்கங்கள் இரண்டு வாரங்களுக்கு முன் கல்வி அமைச்சர் பந்துல குணவர்த்தனவுக்கு அறிவித்தல் கொடுத்திருந்தன.

ஆசிரியர்கள், அதிபர்களின் பதிவி உயர்வுகள், சம்பள முரண்பாட்டை நிவர்த்தி செய்தல், ஆசிரியர் அதிபர்களுக்கு இடர்கால கடன், வீடமைப்புக்கடன் என்பற்றை வழங்க நிதி ஒதுக்கீடு செய்தல், மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 6 சதவீதத்தை கல்விக்கு ஒதுக்குதல், பல்கலைக்கழக முறைமையில் அரசியல் மயமாக்கலை இல்லாது செய்தல், பல்கலைக்கழக சுதந்திரத்தை நிலைநிறுத்தல் என்பவையே இந்த சங்கங்களின் கோரிக்கைகளாக உள்ளன.

அதிபர் ஆசிரயர்களுக்கு இடமாற்றம் வழங்கப்படும் என அமைச்சர் கூறியுள்ளார். ஆனால், இதை ஒழுங்காக செய்வதற்கான இடமாற்ற சபைகள் அமைக்கப்படவில்லை. இதனால் இடமாற்றங்கள் முறையற்ற வகையில் நடக்கலாம் என இலங்கை ஆசிரியர் சங்கத்தின் பொதுச்செயலாளர் ஜோசப் ஸ்ராலின் கூறினார்.

2,15,000 ஆசிரியர்களுக்கு 10,000 அதிபர்களும் இந்த நாட்டில் உள்ளனர். எனவே சங்கங்களுக்கு தமது கோரிக்கைகளை வெற்றிக் கொள்வதற்கான பலமும் பேரம் பேசும் ஆற்றலும் உள்ளது என அவர் கூறினார்.

No comments:

Post a Comment

உங்கள் கருத்துக்கள் வரவேற்கப்படுகின்றன.

ADD TEXT HERE