(அரசாங்க தகவல் திணைக்களம்.)
இளைஞர்களின் திறன்களை மதிப்பீடு செய்யும் புத்தாக்கப் போட்டி மற்றும் கண்காட்சி இன்று 6 ஆம் திகதி முதல் 8ஆம் திகதி வரை கொழும்பு பண்டாரநாயக்க ஞாபகார்த்த மாநாட்டு மண்டபத்தில் நடைபெறவிருப்பதாக இளைஞர் விவகார மற்றும் திறன் அபிவிருத்தி அமைச்சர் டலஸ் அழகப்பெரும தெரிவித்தார்.திறன் அபிவிருத்தியில் இலங்கையை சர்வதேச மட்டத்தில் மேம்படுத்துவதற்கான திட்டங்களை அரசாங்கம் முன்னெடுத்திருக்கிறது. இதன் ஒரு அங்கமாகவே ‘இலங்கை திறன் உங்கள் எதிர்காலத்தைத் தொடுங்கள்’ என்ற திறன்கள் மற்றும் புத்தாக்கப் போட்டி மற்றும் கண்காட்சி யொன்று நடத்தப்படுவதாக அமைச்சர் டலஸ் அழகப்பெரும தெரிவித்தார்.
இலங்கை இளைஞர்களின் திறன்களை மதிப்பீடு செய்வதுடன் திறமையான கைவினைஞர்களின் ஆற்றல்களை சர்வதேச மட்டத்திற்கு மேம்படுத்தும் முகமாக உள்நாட்டு வெளிநாட்டு நிறுவனங்களின் பங்குபற்றுதலுடன் இக்கண்காட்சியும் போட்டியும் ஏற்பாடு செய்யப்பட்டிருப்பதாக அமைச்சர் குறிப்பிட்டார்.
தொடர்ந்தும் கருத்துத் தெரிவித்த அமைச்சர் இலங்கை திறன் அபிவிருத்தியில் இன்னமும் முன்னேற வேண்டியுள்ளது. இலங்கையிலிருந்து பெரும் எண்ணிக்கையானவர்கள் வெளிநாட்டு வேலை வாய்ப்புக்களுக்காகச் செல்கின்றனர். எனினும் இவர்களில் பெரும்பாலானவர்களுக்கு தொழில் திறன் இல்லை. இவர்களின் தொழில் திறன்களை அதிகரிப்பதன் ஊடாக அவர்களின் வருமானத்தையும் அதிகரிக்க முடியும்.
தொழில்திறன் மிக்கவர்களுக்கு தொழில்சந்தையில் பாரிய கேள்வியும் உள்ளது. இதற்கு ஏற்றவகையில் இளைஞர் யுவதிகளின் தொழில்திறன்களை நாம் அபிவிருத்தி செய்ய வேண்டும். இந்த நோக்கத்திலேயே பிராந்திய ரீதியில் தொழில்திறன் குறித்த போட்டிகள் நடத்தப்பட்டு திறமையாகச் செயற்பட்டவர்கள் தேசிய ரீதியிலான போட்டியில் பங்குபற்றியுள்ளனர்.
மேசன் மரவேலை கைத்தொழில் உள்ளிட்ட பல்வேறு துறைகளில் தொழில் திறன் போட்டிகள் நடத்தப்பட்டன. அத்துடன் நவீன உற்பத்திக் கண்டுபிடிப்புக்களுக்கான போட்டிகளும் நடத்தப்பட்டன. மாவட்ட மட்டத்தில் வெற்றிபெற்றவர்கள் இறுதிப் போட்டியில் கலந்துகொள்ளவுள்ளனர்.
இன்று பண்டாரநாயக்க சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் நடைபெறும் கண்காட்சியில் 65 கண்காட்சிக் கூடங்கள் அமைக்கப்படவுள்ளன. தொழில்திறன் போட்டியில் வெற்றியீட்டும் முதலாவது வெற்றியாளருக்கு 2,50,000 ரூபாவும் இரண்டாவது வெற்றியாளருக்கு 1,50,000 ரூபாவும்- மூன்றாவது வெற்றியாளருக்கு 1,00000 ரூபாவும் வழங்கப்படவுள்ளது. புத்தாக்கங்களுக்கும் இவ்வாறு வழங்கப்பட வுள்ளது. வெற்றியீட்டியவர்களுக்காக 11.7 மில்லியன் ரூபா நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.
இக்கண்காட்சி மற்றும் போட்டியின் மூலம் இலங்கையிலுள்ளவர்களின் தொழில்திறனை மேலும் அபிவிருத்தி செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டிருப்பதாகவும் அமைச்சர் மேலும் தெரிவித்தார்.

No comments:
Post a Comment
உங்கள் கருத்துக்கள் வரவேற்கப்படுகின்றன.