திறந்த பல்கலைகழகத்தினால் விஷேட தேவைகள்சார் கல்வியியல் பட்டமேல் டிப்ளோமா நிகழ்ச்சித்திட்டத்திற்கான விண்ணப்பங்கள் தற்போது கோரப்பட்டுள்ளன. ஒருவருட பட்டதாரி ஆசிரியராக அனுபவம் கொண்ட யாவரும் இதற்காக விண்ணப்பிக்கமுடியும்.
ஒருவருட காலத்தைக்கொண்ட இந்நிகழ்ச்சித்திட்டம் எதிர்வரும் ஜனவரியில் ஆரம்பிக்கப்படவுள்ளது. இந்நிகழ்ச்சித்திட்டத்திற்குள் உள்வாங்குவதற்காக எவ்வித தெரிவுப்பரீட்சைகளும் நடாத்தப்படமாட்டாது. பட்டப்பின் கல்வி டிப்ளோமா பாடநெறிக்கு சமமான தகைமை கொண்டதாக இந்நிகழ்ச்சித்திட்டம் வடிவமைக்கப்பட்டுள்ளதால் இந்நிகழ்ச்சித்திட்டத்தை பூர்த்தி செய்யும் ஒருவர் பட்டப்பின் கல்வி டிப்ளோமா பாடநெறியை பூர்த்தி செய்யவேண்டியதில்லை. அதேவேளை கல்வி நிர்வாகசேவை விண்ணப்பத்தில் ‘விஷேடகல்வி’ பாடத்தை தெரிவு செய்வதற்கும் இந்நிகழ்ச்சித்திட்டம் வாய்ப்பை ஏற்படுத்திக்கொடுக்கிறது.
மட்டக்களப்பு திறந்த பல்கலைக்கழகத்தில் இந்நிகழ்ச்சித்திட்டத்தை பயிலவிரும்பும் ஆசிரியர்கள் அங்கு விண்ணப்பபடிவத்தை பெற்றுக்கொள்ளமுடியும். விண்ணப்பமுடிவுத்திகதி எதிர்வரும் டிசெம்பர் மாதம் 18ம் திகதியாகும் .
(kattankudy)
No comments:
Post a Comment
உங்கள் கருத்துக்கள் வரவேற்கப்படுகின்றன.