......................................................................................................முழு நாலும், முழு நாளும்

பின்னூட்டங்களை வரவேற்கின்றோம்....

உங்கள் பின்னூட்டங்களை வரவேற்கின்றோம்.... ninthavurinfo@gmail.com
தினச் செய்திகள்

Tuesday, 27 November 2012

ஓரின சேர்க்கையால் ஓர் உயிர் பலி

By M.Nesamani 
பம்பலப்பிட்டி கடற்கரைப் பகுதியில் களுத்து வெட்டப்பட்ட கொலை செய்யப்பட்ட சம்பவத்திற்கு ஓரின சேர்க்கையே காரணம் என விசாரணைகள் மூலம் தெரியவந்துள்ளதாக பம்லப்பிட்டிய பொலிஸார் தெரிவித்தனர்.


கடந்த 18 ஆம் திகதியன்று கப்பல் நிறுவன முகாமையாளர் ஒருவர் காருக்குள் களுத்து வெட்டப்பட்டு நிலையில் சடலமாக மீட்கப்பட்டார்.

இச் சம்பவம் நடைபெற்ற சில தினங்களில் அதனுடன் தொடர்புடைய சந்தேக நபர் ஒருவர் பாமன்கடை பிரதேசத்தில் வைத்து கைது செய்யப்பட்டார்.

புடவை வர்தகத்தினை மேற்கொண்டு வந்த இந்த பிரதான சந்தேக நபரது மகனுக்கும் பலியான நபருக்கும் இடையில் ஓரின தொடர்பு இருந்து வந்துள்ளதாகவும் அதனை தடுத்து நிறுத்த பல வழிகளிலும் முயற்சித்த போதும் முடியாமல் போகவே குறித்த நபரை கொலை செய்ய நேர்ந்ததாகவும் பிரதான சந்தேக நபர் பொலிஸில் வாக்குமூலம் அளித்துள்ளார்.

சம்பவத்தையடுத்து பிரதான சந்தேக நபரது 25 வயதுடைய மகனும் கைது செய்யப்பட்டுள்ளதுடன் தற்போது அவ்விருவரும் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கும் பம்பலப்பிட்டி பொலிஸார் சம்பவம் தொடர்பிலான மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருவதாக தெரிவித்தனர்.
(veerakesai)

No comments:

Post a Comment

உங்கள் கருத்துக்கள் வரவேற்கப்படுகின்றன.

ADD TEXT HERE