......................................................................................................முழு நாலும், முழு நாளும்

பின்னூட்டங்களை வரவேற்கின்றோம்....

உங்கள் பின்னூட்டங்களை வரவேற்கின்றோம்.... ninthavurinfo@gmail.com
தினச் செய்திகள்

Tuesday, 27 November 2012

எரிபொருள் மானியம்;; பெற்.கூட்டுத்தாபனத்துக்கு தினமும் ரூ.137 மில் நஷ்டம்


பெற்றோலியக் கூட்டுத்தாபனம் ஒரு லீற்றர் மண்ணெண்ணெயை 14.78 ரூபா நஷ்டத்திலும் பெற்றோலை 2 ரூபா நஷ்டத்திலும் டீசலை 10 ரூபா நஷ்டத்திலும் வழங்குவதோடு மின் உற்பத்திக்காக 37.49 நஷ்டத்தில் எரிபொருள் வழங்கி வருகிறது. இதன் மூலம், கிடைக்கும் நிவாரணம் 2 கோடி மக்களை சென்றடைகிறது என பெற்றோலிய வளத்துறை அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்தார்.

பெற்றோலிய வள அமைச்சின் மீதான குழுநிலை விவாதத்தில் உரையாற்றிய அவர், உலக சந்தையில் ஒரு லீற்றர் எண்ணெய் விலை 121-125 டொலர்களாகிறது. ஆனால், நஷ்டத்திலே நாம் மக்களுக்கு எரிபொருள் வழங்கி வருகின்றோம். மண்ணெண்ணெய் 14.78 ரூபா நஷ்டத்திலும், பெற்றோல் 2 ரூபா நஷ்டத்திலும், டீசல் 10 ரூபா நஷ்டத்திலும் விற்கப்படுகின்றன.
இதன்படி, எரிபொருள் குறைந்த விலைக்கு விற்பதன் ஊடாக மட்டும் பெற்றோலியக் கூட்டுத்தாபனம் ஒரு நாளைக்கு 65 மில்லியன் ரூபா நஷ்டமடைகிறது.
மின்சார சபைக்கு எண்ணெய் வழங்குவதன் மூலம் தினமும் 72 மில்லியன் நஷ்டம் ஏற்படுகிறது. இதன்படி, பெற்றோலியக் கூட்டுத்தாபனம் எண்ணெயைக் குறைந்த விலைக்கு வழங்குவதன் மூலம் மட்டும் தினமும் 137 மில்லியன் ரூபா நஷ்டம் ஈட்டிவருகிறது.
ஹெஜ்ஜிங் கொடுக்கல் வாங்கல் தொடர்பான வழக்குகள் தொடர்பில் சட்டத்தரணிகளுக்கான கட்டணம் தவிர வேறு எதுவும் வழங்கப்படவில்லை. தரம் குறைவான எரிபொருள் தருவித்த கம்பனியின் ஊடாக வேறு எரிபொருள் கொள்வனவு செய்வதில்லையென முடிவுசெய்துள்ளோம். இந்தக் கொடுக்கல் வாங்கலினால் கூட்டுத்தாபனத்துக்கு எதுவித நஷ்டமும் ஏற்படவில்லை.
ஈரானில் இருந்து வருட ஒப்பந்தப்படி 13 கப்பல்களில் எரிபொருள் கொள்வனவு செய்யப்பட்டு வந்தன. எனினும், பொருளாதாரத் தடையினால் இந்த நடவடிக்கைக்குப் பாதிப்பு ஏற்பட்டுவிட்டது.
சபுகஸ்கந்தயில் ஏற்பட்ட விபத்தில் இருவர் உயிரிழந்த சம்பவம் தொடர்பில் சுயாதீனக் குழு விசாரணைகளை முன்னெடுக்கின்றது. ஐம்பது வருடம் பழைமையான எரிபொருள் விநியோகக் குழாய்களே உள்ளதால் அடிக்கடி கசிவு ஏற்படுகிறது. இந்தக் குழாய்களுக்கு மேல் வீடுகளை அமைத்து 400 குடும்பங்கள் வசித்து வருகின்றன. இவர்களை வேறு இடங்களுக்கு அனுப்பி புதிதாகக் குழாய்களை அமைக்கவுள்ளோம். இதற்காக 45 மில்லியன் டொலர் செலவிடப்படும். இந்தியா போன்ற நாடுகளில் இலங்கையை விட எரிபொருள் விலை உயர்வாகவே உள்ளது.
மத்தள விமான நிலையத்துக்கு எரிபொருள் விநியோகிக்கவும், கட்டுநாயக்க விமான நிலைய இரண்டாம் கட்டுத்துக்கான எரிபொருள் வழங்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
பெற்றோலியக் கூட்டுத்தாபனத்தின் ஊடாக முன்னெ டுக்கப்படும் சகல திட்டங்களும் கேள்வி மனுக்கோரியே மேற்கொள்ளப்படுகிறது. பெற்றோலியத் துறையில் நஷ்டம் ஏற்படப் பிரதான காரணம் சர்வதேச சந்தையில் விலை அதிகரிப்புக்கு ஏற்ப இலங்கையில் எண்ணெயின் விலை அதிகரிக்கப்படாமையே ஆகும்.
2011ஆம் ஆண்டின் 9வது மாதத்திலிருந்து தான் எண்ணெய் விலை அதிகரிக்கப்பட்டது. அதேபோன்று இந்த வருடத்தின் முதல் நான்கு மாதகாலமாக மழை இருக்கவில்லை. இதனால் மின்உற்பத்திக்காகப் பாரியளவு எரிபொருள் செலவுசெய்யப்பட்டது. இதற்காக எரிபொருளை மானியமாக வழங்கினோம். நாளொன்றுக்கு 2.4 மில் லியன் லீற்றர் எரிபொருளை விநியோ கித்தோம். 60 வீதமான எரிபொருள் மின் உற்பத்திக்கே வழங்கப்பட்டது என்றார்.
(thinakaran)

No comments:

Post a Comment

உங்கள் கருத்துக்கள் வரவேற்கப்படுகின்றன.

ADD TEXT HERE