மீன்சந்தையை பேலியா கொடையில் அமைத்தது போல், காய்கறி மொத்த விற்பனை, அரிசிச் சந்தை போன்றவற்றையும் பேலியாகொடைக்குக் கொண்டு வர அரசு தீர்மானித்துள்ளது.
பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பசில் ராஜபக்ஷ இவ்வாறு தெரிவித்தார்.
கொழும்பு - களனி பாதையில் முதலாவது பிரவேச வாயில் பேலியாகொடையாகும்.
அதனால் சகல மொத்த விற் பனை நிலையங்களையும் பேலியாகொடையில் துரிதமாக அமைப்போம் என்றும் அமைச்சர் கூறினார்.
பேலியாகொடையில் “சீ சிட்டி” வர்த்தகத் தொகுதியின் நிர்மாணப் பணிகளை ஆரம்பித்து வைத்து அமைச்சர் உரையாற்றினார்.
களனிப் பல்கலைக்கழக வேந்தர் கலாநிதி வெலமிட்டியாவே குசலதர்ம தேரரின் பிரித் பாராயணத்தோடு அடிக்கல் நடப்பட்டது.
இங்கு 16 ஏக்கர் நிலப்பரப்பில் 250 கடைகள் அமைக்கப்படும். இதன் பரப்பளவு 1,50,000 சதுர அடிகளாகும.
இரு கட்டங்களாக நிர்மாணப் பணிகள் மேற்கொள்ளப்படும். முதற் கட்டத்துக்கு 1200 மில்லியன் ரூபா செலவிடப்படும்.
சிங்கப்பூரில் முஹம்மத் முஸ்தபாவுக்கு இக்காணிகளை வழங்க பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது.
அந்த முதலீட்டாளர் இலங்கைக்கு வரவில்லை.
முஸ்தபா இன்று வந்தால் இந்தக் காணி பொறியியற் கூட்டுத்தாபனத்துக்கு உரிமையாகி இருக்காது.
நாம் இந்நாட்டில் முதலீட்டுக்காக முஸ்தபாவை அழைத்துள்ளோம். அவர் இலங்கைக்கு வருவார்.
அரச சொத்தைப் பாதுகாத்து வெளிநாட்டு முதலீட்டு வாய்ப்புகளைப் பெறுகின்ற “மஹிந்த சிந்தனைக்” கொள்கையின் கீழ் இயலுமானது என்றும் அமைச்சர் கூறினார்.
அமைச்சர் விமல் வீரவன்ச பேசுகையில்,
அரச பொறியியற் கூட்டுத்தாபனம் இன்று புதிய மாற்றத்துக்கு அடித்தளம் இட்டுள்ளது.
குலசிங்க ஆரம்பித்த இக் கூட்டுத்தாபனம் அவரின் பெயருக்கு கெளரவம் செய்ய வேண்டும்.
சம்பளம் செலுத்த இயலாத நிலைக்கு இக்கூட்டுத்தாபனம் மாறியது.
மூடப்பட இருந்த இக்கூட்டுத்தாபனத்தை மீண்டும் கட்டி எழுப்ப ஜனாதிபதி செயற்பட்டார் என்றார். (எப். எம்)
(thinakaran)
No comments:
Post a Comment
உங்கள் கருத்துக்கள் வரவேற்கப்படுகின்றன.