......................................................................................................முழு நாலும், முழு நாளும்

பின்னூட்டங்களை வரவேற்கின்றோம்....

உங்கள் பின்னூட்டங்களை வரவேற்கின்றோம்.... ninthavurinfo@gmail.com
தினச் செய்திகள்

Monday, 26 November 2012

பூனையாக இருந்த விமலின் இன்றைய வீரத்தனம் நகைச்சுவாயானது: உதித்

மாகாணசபை முறைமையைக் கொண்டுவருவதற்காக இந்திய அரசாங்கத்தின் ஆதரவைப் பெற்றுக்கொள்ளும்போது பூனையைப் போன்று இருந்த விமல் வீரவன்ச, இன்று ஒரு வீரரைப்போல் மாகாணசபை வேண்டாம் என்று கூச்சலிடுவது நகைச்சுவையாக உள்ளது என்று ஆளுங்கட்சியின் மத்திய மாகாணசபை உறுப்பினர் உதித் அநுராத தெரிவித்துள்ளார். 


மக்கள் விடுதலை முன்னணியைக் காட்டிக்கொடுத்துவிட்டு புதிய கட்சியொன்றை ஆரம்பித்துக்கொண்ட விமல் வீரவன்ச, ஜனாதிபதியின் ஆசிர்வாதத்தில் அமைச்சுப் பொறுப்பொன்றைப் பெற்றுக்கொண்டுவிட்டு இப்போது மாகாணசபை வேண்டாம் என்று கூறுவது வெட்கமற்ற தனத்தைக் காண்பிக்கிறது என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார். 

தம்புள்ளை, கலோகஹஎல பகுதியில் இடம்பெற்ற கூட்டமொன்றில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே மாகாணசபை உறுப்பினர் உதித் அநுராத மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.  
(tamilmirror)

No comments:

Post a Comment

உங்கள் கருத்துக்கள் வரவேற்கப்படுகின்றன.

ADD TEXT HERE