நியூசிலாந்து அணி நிர்ணயித்த 188 என்ற வெற்றி இலக்கை டில்சானின் சதத்தின் உதவியுடன் அடைந்த இலங்கை அணி 7 விக்கெட்டுகளால் வெற்றி பெற்றது.
இலங்கை மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான 3ஆவது ஒரு நாள் போட்டி நேற்று கண்டி பல்லேகளேயில் இடம்பெற்றது.
இப்போட்டின் போது மழை குறுக்கிட்டதால் 33 ஓவர்களாக குறைக்கபட்டது. இந்நிலையில் நாணய சுழற்சியில் வெற்றி இலங்கை அணி நியூசிலாந்து அணியை முதலில் துடுப்பெடுத்தாடுமாறு பணித்தது.
அந்தவகையில் முதலில் துடுப்பெடுத்தாடிய நியூசிலாந்து அணி 33 ஓவர்களில் 6 விக்கெட்டுகளை இழந்து 188 ஓட்டங்களை பெற்றது.
துடுப்பாட்டத்தில் வெட்லிங் (96), பிரேங்கிளின் (26), மெக்கலம் (22) அதிகூடுதலாக பெற்றனர்.
இலங்கை அணியின் பந்து வீச்சில் ஜீவன் மெண்டிஸ் இரு விக்கெட்டுகளை கைப்பற்றினார்.
இதனையடுத்து இலங்கை அணி வெற்றி பெற 33 ஓவர்களில் 197 ஓட்டங்களை பெற வேண்டும் என அறிவிக்கப்பட்டது.
அந்தவகையில் வெற்றி இலக்கை நோக்கி களமிறங்கிய இலங்கை அணி 31.1 ஓவர்களில் 3 விக்கெட்டுகளை மாத்திரம் இழந்து 200 ஓட்டங்களை பெற்று வெற்றி பெற்றது.
துடுப்பாட்டத்தில் தரங்க (10), சங்கக்கார (15), ஜயவர்தன (5) என ஏமாற்றமளிக்க ஆரம்ப வீரராக களமிறங்கி அதிரடியாக துடுப்பெடுத்தாடிய டில்சான் ஆட்டமிழக்காது
நியூசிலாந்து அணியின் பந்து வீச்சில் மில்ஸ், சவுத்தி, வோரம் தலா ஒவ்வொரு விக்கெட்டுகளை கைப்பற்றினர்.
போட்டியின் ஆட்டநாயகனாக டில்சான் தெரிவு செய்யப்பட்டார்.
|
|
No comments:
Post a Comment
உங்கள் கருத்துக்கள் வரவேற்கப்படுகின்றன.