......................................................................................................முழு நாலும், முழு நாளும்

பின்னூட்டங்களை வரவேற்கின்றோம்....

உங்கள் பின்னூட்டங்களை வரவேற்கின்றோம்.... ninthavurinfo@gmail.com
தினச் செய்திகள்

Monday, 26 November 2012

எம்.பி அல்லாத ஒருவருக்கு 66% ஒதுக்கீடு: சுமந்திரன்

(அழகன் கனகராஜ்)

நாடாளுமன்றமே நிதிவிவகாரங்களுக்கு பொறுப்பு கூறவேண்டும் எனினும் 2013 ஆம் ஆண்டிற்கான வரவு-செலவுத்திட்டத்தில் நாடாளுமன்ற உறுப்பினர் அல்லாத ஒருவருக்கு 66 சதவீதம் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது என்று தமிழ் தேசியக்கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.சுமந்திரன் தெரிவித்தார்.


எதிர்கட்சி தலைவர் அலுவலகத்தில் நேற்;று ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற 'எதிர்க்கட்சிகளின் எதிர்ப்பு' ஊடகவியலாளர் மாநாட்டில் கலந்து கொண்டு கருத்து தெரிவித்த போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
அங்கு அவர் தொடர்ந்து தெரிவிக்கையில்,

"நிதி விவகாரங்களுக்கு நாடாளுமன்றமே பொறுப்பு கூறவேண்டும் எம்.பி அல்லாத ஒருவருக்கு நாடாளுமன்றத்திற்கு பொறுப்பு கூறமுடியாது. 2013 ஆம் ஆண்டிற்கான வரவு - செலவுத்திட்டத்தில் நிதி,பாதுகாப்பு,துறைமுக மற்றும் நெடுஞ்சாலைகள் ஆகிய மூன்று அமைச்சுகளுக்கே 66 சதவீதம் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.

அந்த அமைச்சுகள் ஜனாதிபதியின் கீழ் இருக்கின்றது ஜனாதிபதி நாடாளுமன்ற உறுப்பினர் அல்ல அவரினால் நாடாளுமன்றத்திற்கு பொறுப்பு கூறவோ முடியாது ஏனெனில் அவர் நாடாளுமன்ற உறுப்பினர் அல்ல. அவரின் கீழுள்ள அமைச்சுக்கே மொத்த செலவில் 66 சதவீதம் ஒதுக்கப்பட்டுள்ளது.

இது நாடாளுமன்றத்தின் பலத்தை குறைப்பதற்கான நடவடிக்கையாகும் சட்டவாக்கத்துறையையும் நிறைவேற்று அதிகாரத்திற்குள் கொண்டுவந்து நீதித்துறையையும் கையிலெடுக்கும் ஏகாதிபத்திய முறைக்டிகேடாகும்" என்றார.
(tamilmirror)

No comments:

Post a Comment

உங்கள் கருத்துக்கள் வரவேற்கப்படுகின்றன.

ADD TEXT HERE