அடுத்த போப் பாண்டவரை தேர்ந்தெடுப்பதற்கான கார்டினல்களைக் கொண்ட உயர்நிலைக் குழுவில் 6 கிறிஸ்தவ மதகுருக்கள் இணைந்துள்ளனர்.
வந்திக்கானில் உள்ள செயின்ட் பீட்டர்ஸ் பசிலிகா தேவாலயத்தில் பதினாறாவது போப் பெனடிக்ட் தலைமையில் சனிக்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சியில் இந்த 6 மத குருக்களின் பெயர்கள் முறைப்படி அறிவிக்கப்பட்டன. இதில் இந்தியாவின் கேரளத்தைச் சேர்ந்த பஸலியோஸ் கிZமிஸ் தொட்டுங்கல் என்பவரும் அடங்குவார். இவர் திருவனந்தபுரத்தில் உள்ள kரோ - மலங்கரா தேவாலயத்தின் மதகுரு ஆவார்.
மேலும், கொலம்பியா (ருபென் சலஸர் கோமெஸ்), லெபனான் (பெச்சரா புத்ரோஸ்), நைஜீரியா (ஜான் ஓலோரன் பெமி ஓனையெகன்), பிலிப்பின்ஸ் (லூயிஸ் அந்தோனியோ டாகிள்) மற்றும் அமெரிக்கா (ஜேம்ஸ் எம். ஹார்வி) ஆகிய நாடுகளைச் சேர்ந்த 5 பேர் இக்குழுவில் இடம்பிடித்துள்ளனர்.
இவர்களின் பெயர்களை லத்தீன் மொழியில் பெனடிக்ட் அறிவித்த போது அங்கு கூடியிருந்த 6 பேரின் உறவினர்கள் மற்றும் நண்பர்கள் உள்ளிட்டோர் கைதட்டி ஆரவாரம் செய்தனர். இதன்மூலம் உலகின் அனைத்துப் பகுதிகளைச் சேர்ந்தவர்களுக்கும் போப் தேர்வுக் குழுவில் பிரதிநிதித்துவம் அளிக்கப்பட்டுள்ளதாக பெனடிக்ட் தெரிவித்தார்.
(thinakaran)
No comments:
Post a Comment
உங்கள் கருத்துக்கள் வரவேற்கப்படுகின்றன.