......................................................................................................முழு நாலும், முழு நாளும்

பின்னூட்டங்களை வரவேற்கின்றோம்....

உங்கள் பின்னூட்டங்களை வரவேற்கின்றோம்.... ninthavurinfo@gmail.com
தினச் செய்திகள்

Monday, 26 November 2012

அரபாத்தின் உடல் நாளை தோண்டி எடுத்து சோதனை


பலஸ்தீன முன்னாள் தலைவர் யாசிர் அரபாத்தின் உடல் நாளை (செவ்வாய்க் கிழமை) தோண்டி எடுக்கப்படவுள்ளதாக பலஸ்தீன நிர்வாகம் அறிவித்துள்ளது. கடந்த 2004ம் ஆண்டு பாரிஸில் மரணமடைந்த யாசிர் அரபாத்தின் உடல் மீது நிபுணர்களால் சோதனை மேற்கொள்ளப்படவுள்ளது.
அரபாத்திற்கு நஞ்சூட்டப்பட்டதாக எழுந்த சந்தேகத்தைத் தொடர்ந்தே அவரது உடல் தோண்டி எடுக்கப்படவுள்ளது.
அரபாத்தின் மருத்துவ அறிக்கையில் அவர் இரத்த கோளாரால் பாதிக்கப்பட்டதாக குறிப்பிடப்பட்டுள்ளது. எனினும் அரபாத்தின் உடைமைகளில் பொலொனியம் - 210 எனும் ஆட்கொல்லி கதிரியக்கம் இருப்பதை சுவிட்சர்லாந்து நிபுணர்கள் அண்மையில் கண்டு பிடித்தனர்.
இது தொடர்பில் கடந்த ஓகஸ்ட் தொடக்கம் பிரான்ஸ¤ம் மரண விசாரணையை ஆரம்பித்துள்ளது. இதனையொட்டி அரபாத்தின் உடல் புதைக்கப்பட்டிருக்கும் மேற்குக் கரையின் ரமல்லா அடக்கஸ்தலம் இம்மாத ஆரம்பத்திலேயே மூடப்பட்டது.
இந்நிலையில் அரபாத்தின் உடல் வைக்கப்பட்டிருக்கும் அடக்கஸ்தலத்தின் மேற்பரப்பிலிருக்கும் கல் இன்று அகற்றப்பட்டு அவரது உடல் மேலே எடுக்கப்படவுள்ளது. இதன்போது அரபாத்தின் மரணம் குறித்து தனித்தனியாக விசாரணை மேற்கொள்ளும் பிரான்ஸ், சுவிட்சர்லாந்து மற்றும் ரஷ்யாவின் விஞ்ஞானிகள், அவரது உடலில் இருந்து மாதிரிகளை பெறவுள்ளதாக பலஸ்தீன உளவுப் பிரிவு தலைவர் தெளபிக் திராவி தெரிவித்துள்ளார்.
மேற்படி நிபுணர்கள் பெறப்பட்ட மாதிரிகளை கொண்டு அவர்களது நாடுகளுக்கு சென்று பொலொனியம் கதிரியக்கம் அல்லது வேறு ஏதாவது நச்சுப் பொருள் இருப்பது குறித்து ஆய்வு நடத்தவுள்ளனர். யாசிர் அரபாத்தின் உடல் அன்றைய தினமே (நாளை) இராணுவ மரியாதையுடன் மீண்டும் புதைக்கப்படவுள்ளது.
(thinakaran)

No comments:

Post a Comment

உங்கள் கருத்துக்கள் வரவேற்கப்படுகின்றன.

ADD TEXT HERE