......................................................................................................முழு நாலும், முழு நாளும்

பின்னூட்டங்களை வரவேற்கின்றோம்....

உங்கள் பின்னூட்டங்களை வரவேற்கின்றோம்.... ninthavurinfo@gmail.com
தினச் செய்திகள்

Monday, 26 November 2012

சா/த சித்தியடையாதவர் தெரிவுக்குழுவில்: ஹேமகுமார

(அழகன் கனகராஜ்)
பிரதம நீதியரசருக்கு எதிரான தெரிவுக்குழு வைராக்கியத்துடன் நியமிக்கப்பட்டதொன்றாகும். அந்த தெரிவுக்குழுவில் கல்விப் பொது தராதரத்தில் சித்தியடையாத ஒருவரும் அங்கம் வகிக்கின்றார் என்று முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஹேமகுமார நாணயக்கார தெரிவித்தார்.


எதிர்க்;கட்சி தலைவர் அலுவலகத்தில் இன்று ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற 'எதிர்க்கட்சிகளின் எதிர்ப்பு' ஊடகவியலாளர் மாநாட்டில் கலந்து கொண்டு கருத்து தெரிவித்த போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். அங்கு அவர் தொடர்ந்து தெரிவிக்கையில்,

"தெரிவுக்குழுவில் சட்டத்தரணிகள் அங்கம் வகிக்க வேண்டும் இல்லையேல் அந்த துறையில் அனுபவமிக்கவர்கள் அங்கம் வகிக்கலாம் எனினும் தெரிவு செய்யப்பட்டுள்ள நாடாளுமன்ற தெரிவுக்குழுவில்; கல்விப்பொது தராதரத்தில் சித்தியடையாத ஒருவரும் அங்கம் வகிக்கின்றார் ஆகையால் இது வைராக்கியத்துடன் முன்னெடுக்கப்படுகின்ற செயற்பாடாகும்.

போலவே பிரதம நீதியரசருக்கு எதிரான நாடாளுமன்ற தெரிவுக்குழு கங்காரு நீதிமன்றம்  இருக்கின்றது. வாழ்வின் எழுச்சி (திவிநெகும) சட்டமூலத்திற்கு எதிராக தீர்ப்பளிக்கப்பட்டமையினாலேயே குற்றப்பிரேரணை கொண்டுவரப்பட்டதாக அந்த பிரேரணையில் கைச்சாத்திட்டவர்களில் ஒருவர் தெரிவித்துள்ளார்.

வடக்கில் பயங்கரவாதம் தோற்றுவதற்கு முன்னரே தெற்கில் பயங்கரவாதம் தலைதூக்கியிருந்தது. அக்காலத்தில் குண்டுகளை தயாரித்துக்கொண்டு எம்பிலிபிட்டியவையில் இளநீர் விற்றுக்கொண்டிருந்த ஒருவரும் இந்த குழுவில் அங்கம் வகிக்கின்றார்" என்றார். 
(tamilmirror)

No comments:

Post a Comment

உங்கள் கருத்துக்கள் வரவேற்கப்படுகின்றன.

ADD TEXT HERE