......................................................................................................முழு நாலும், முழு நாளும்

பின்னூட்டங்களை வரவேற்கின்றோம்....

உங்கள் பின்னூட்டங்களை வரவேற்கின்றோம்.... ninthavurinfo@gmail.com
தினச் செய்திகள்

Thursday, 8 November 2012

திவிநெகும தீர்ப்பு 13ஆவது திருத்தத்தை தலைநிமிர்த்தியுள்ளது: சிறிதுங்க

(tamilmirror)
திவிநெகும சட்டமூலம் நிறைவேற்றப்பட்டால், நீதிமன்ற செயற்பாடுகளில் கடுகளவேனும் சுயாதீனம் இருந்திருக்காது திவிநெகும சட்டமூலத்திற்கு எதிரான வழக்கில் உயர்நீதிமன்றம் வழங்கியுள்ள தீர்ப்பானது 13ஆவது திருத்தச் சட்டத்தை தலைநிமிரச் செய்துள்ளது என ஐக்கிய சோஷலிச கட்சியின் தலைவர் சிறிதுங்க ஜயசூரிய தெரிவித்தார். 


'அதிகாரத்தை பகிர்ந்து நாட்டை ஐக்கியப்படுத்துவோம்' என்ற தலைப்பில் கொழும்பில் இன்று இடம்பெற்ற எதிர்க்கட்சிகளின் ஒன்றிணைந்த செய்தியாளர் மாநாட்டில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். 

இந்த செய்தியாளர் மாநாட்டில் ஜனநாயக மக்கள் முன்னணியின் தலைவர் மனோ கணேசன், கொழும்பு மாநகர முன்னாள் பிரதி மேயர் அசாத் சாலி, புதிய இடதுசாரி முன்னணியின் தலைவர் கலாநிதி விக்கிரமபாகு கருணாரத்ன, தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.சுமந்திரன் ஆகியோர் கலந்துகொண்டிருந்தனர். 

இதன்போது தொடர்ந்து கருத்து தெரிவித்த சிறிதுங்க ஜயசூரிய மேலும் கூறுகையில், 

'இந்த நாட்டு மக்களின் உரிமைகளை ஒட்டுமொத்தமாக பறிக்கும் வகையிலேயே திவிநெகும சட்டமூலம் தயாரிக்கப்பட்டுள்ளது. இது நிறைவேற்றப்படும் பட்சத்தில் நாட்டின் அனைத்து செயற்பாடுகளும் சர்வாதிகார தீர்மானத்திற்கமையவே இடம்பெறும். 

நாட்டின் அனைத்து செயற்பாடுகளையும் இராணுவமயமாக்கும் முயற்சியில் அரசாங்கம் செயற்பட்டு வருகின்றது. இந்த இராணுவமயமாக்கல் பயணத்துக்கு இடையூறாக உள்ள அனைத்தையும் நிர்மூலமாக்கும் முயற்சியிலும் ஈடுபட்டு வருகின்றது.
 
திவிநெகும விவகாரத்தில் அரசாங்கத்துக்கு சாதகமான தீர்ப்பு கிடைக்காத பட்சத்திலேயே பிரதம நீதியரசர் ஷிராணி பண்டாரநாயக்காவுக்கு எதிராக குற்றப்பிரேரணை கொண்டுவரப்பட்டுள்ளது. அவர் மீது குற்றச்சாட்டுக்களை முன்வைத்துள்ளவர்கள், முதலில் அவர்களது தவறுகளையும் ஊழல்களையும் பற்றி சிந்திக்க வேண்டும். முதலில் தாங்கள் செய்த தவறுகளுக்கு பிராயச்சித்தம் தேடி நியாயத்தை நிலைநாட்ட வேண்டும். 

ஊழல் மோசடிகளையும் அதிகார துஷ்பிரயோகங்களையும் செய்துவதும் அரசியல்வாதிகளை மடியில் வைத்துக்கொண்டுள்ள இந்த அரசாங்கம், பிரதம நீதியரசர் போன்று நியாயமாக நடந்துகொள்பவர்களுக்கு எதிராக குற்றச்சாட்டுக்களை முன்வைத்து மக்களை முட்டாள்களாக்கப் பார்க்கின்றது. இந்த நிலைமை நீடிக்குமாயின் எதிர்காலத்தில் நாம் அனைவரும் நிர்வாணமாகவே நடமாடவேண்டிய சூழ்நிலை உருவாகும். 

திவிநெகும சட்டமூலத்தின் மூலம் இராணுவமயப்பட்ட செயற்பாடுகளை முன்னெடுக்கவே அரசாங்கம் முயற்சிக்கின்றது. இந்த சட்டமூலத்தை நிறைவேற்றுவதன் மூலம் எதிர்க்கட்சிகள், பொது அமைப்புக்கள் மற்றும் பொதுமக்களின் செயற்பாடுகளை கண்காணிக்க அரசாங்கம் முயற்சிக்கின்றது. 

அரசாங்கத்துக்கு எதிராகவோ அல்லது அரசாங்கத்துக்கு தெரியாமலோ எந்தவொரு நடவடிக்கையையும் எவரும் முன்னெடுக்க முடியாதளவுக்கு அனைத்தையும் கிராம மட்டத்தில் கண்காணிக்க இச்சட்டத்தின் மூலம் நடவடிக்கை எடுக்கப்படவுள்ளது. இந்த உண்மையை புரிந்துகொண்டு இந்த சட்டமூலத்துக்கு எதிராக வீதியில் இறங்க மக்கள் அணிதிரள வேண்டும். எதிர்க்கட்சிகள் கைகோர்க்க வேண்டும்' என்றார். 

No comments:

Post a Comment

உங்கள் கருத்துக்கள் வரவேற்கப்படுகின்றன.

ADD TEXT HERE