......................................................................................................முழு நாலும், முழு நாளும்

பின்னூட்டங்களை வரவேற்கின்றோம்....

உங்கள் பின்னூட்டங்களை வரவேற்கின்றோம்.... ninthavurinfo@gmail.com
தினச் செய்திகள்

Monday, 26 November 2012

போக்குவரத்துப் பொலிஸாரின் சீருடையில் மர்ம நபர்கள்: குருணாகலில் 10 இலட்சம் பணம் கொள்ளை


குருணாகல் வாரியபொல பொலிஸ் பிரிவுக்குட்பட்ட சிலாபம் வீதியில் போக்குவரத்துப் பொலிஸாரின் சீருடையில் வந்த இருவர் லொறி ஒன்றை நிறுத்தி 10 இலட்சத்து 40 ஆயிரம் ரூபா பணத்தை கொள்ளையிட்டுச் சென்றுள்ளனர்.
 
வாரியபொல நகரில் வர்த்தகராக செயற்பட்டுவரும் ஏ.ரி.நஜிமுடீன் என்பவரே பணத்தைப் பறிகொடுத்துள்ளார். இச்சம்பவம் தொடர்பாக வாரியபொல பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.
 
இக்கொள்ளைச் சம்பவம் தொடர்பில் வர்த்தகர் நஜிமுடீன் வீரகேசரி இணையத்தளத்துக்குக் கருத்து தெரிவிக்கையில்,
 
வர்த்தக நடவடிக்கைகளை முடித்துக்கொண்டு பணத்துடன் எனது லொறியில் சிலாபம் வீதியில் மல்வான என்ற இடத்தில் பயணித்துக்கொண்டிருந்த போது வழியில் நின்ற போக்குவரத்துப் பொலிஸார் வாகனத்தை நிறுத்தும்படி சைகை காட்டினர். நான் வாகனத்தை நிறுத்தி ஆவணங்களை காட்டினேன். அவ்வேளை எனது வாகனத்தில் கைத் துப்பாக்கியொன்று உள்ளதாக தகவல் கிடைத்துள்ளதாக பரிசோதித்தனர்.
 
அதன்பின்னர் பணப்பையை உள்ளிருந்து எடுத்த அவர்கள் மோட்டார் சைக்கிளில் ஏறிச் சென்றுவிட்டனர். இவர்கள் யார் என்பது மர்மமாகவே உள்ளது என்றார்.
(veerakesari)

No comments:

Post a Comment

உங்கள் கருத்துக்கள் வரவேற்கப்படுகின்றன.

ADD TEXT HERE