......................................................................................................முழு நாலும், முழு நாளும்

பின்னூட்டங்களை வரவேற்கின்றோம்....

உங்கள் பின்னூட்டங்களை வரவேற்கின்றோம்.... ninthavurinfo@gmail.com
தினச் செய்திகள்

Tuesday, 16 October 2012

டாக்டர் சாகிர் நாயிக் கூறிய விடயத்தை அவர் கூறவில்லை என செயலாளர் பஸ்லுள் ஜிப்ரி கூறுவதற்கு காரணம் என்ன? – சல்மா அமீர் ஹம்சா


முஸ்லிம் பெண்கள் அரசியலில் இஸ்லாமிய வரையறைகளுக்குள் நின்று ஈடுபடலாம் என டாக்டர் சாகிர் நாயக் கூறியதை மாற்ற முனைகின்றார் டாக்டர் சாகிர் நாயக்கின் சர்தேச செயலாளர் என்று தன்னை கூறிக்கொள்ளும் பஸ்லுள் ஜிப்ரி என காத்தான்குடி நகர சபை உறுப்பினர் சல்மா அமீர் ஹம்சா வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

அந்த அறிக்கையில் சல்மா அமீர் ஹம்சா தொடர்ந்து தெரிவித்துள்ளதாவது,
அண்மையில் இஸ்லாமிய மார்க்க அறிஞரும் இஸ்லாமிய மார்க்க பிரச்சாரகருமான டாக்டர் சாகிர் நாயக் இலங்கை வந்திருந்தார்.
அப்போது அவரை ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரசின் தலைவரும் நீதியமைச்சருமான றஊப் ஹக்கீம் மற்றும் அவரது சகோதரர் டாக்டர் ஹபீஸ், மற்றும் டாக்டர் சாகிர் நாயக்கின் செயலாளர் என தன்னை கூறிக்கொள்ளும் பஸ்லுள் ஜிப்ரி உட்பட அமைச்சர் றஊப் ஹக்கீமின் மனைவி அவரது பிள்ளைகள், சகோதரரின் மனைவி மற்றும் நான் ஆகியோர் அவரை  சந்தித்து கலந்துரையாடினோம்.
இங்கிருந்த மேற்படி அனைவரும் ஆங்கில மொழியை சரளமாக புரிந்து கொள்ளக் கூடியவர்கள்.
அந்த நேரம் நான் ஒரு கேள்வியை டாக்டர் சாக்கிர் நாயிக்கிடம் கேட்டேன்
முஸ்லிம் பெண்கள் அரசியலில் ஈடுபடுவது பற்றி நீங்கள் எழுதிய நூல்களை பார்த்துள்ளேன். முஸ்லிம் பெண்கள் அரசியலில் சமூக சேவைகளில் ஈடுபடுவது பற்றி உங்கள் கருத்து என்ன என்று நான் கேட்டதற்கு டாக்டர் சாக்கிர் நாயிக் மிக தெளிவாக பதில் கூறினார்.
முஸ்லிம் பெண்கள் இஸ்லாமிய வரையறைகளுக்குள் நின்று அரசியலில் சமூக சேவையில் இஸ்லாம் கூறும் நிபந்தனைகளுடன் ஈடுபடமுடியும், இஸ்லாமிய அடிப்படையை மீறாத வகையில் முஸ்லிம் பெண்கள் அரசியலில் ஈடுபடலாம் என தெளிவாக கூறினார்.
இதை டாக்டர் சாக்கிர் நாயிக் கூறும் போது நான் மட்டும் இருக்க வில்லை மேற் சொன்ன அனைவரும் இருந்தனர். இதனால் காத்தான்குடி இன்போ செய்தியாளருக்கு நான் அந்த செய்தியை வழங்கினேன்.
இவ்விடயம் இவ்வாறிருக்க செயலாளர் என கூறும் பஸ்லுல் ஜிப்ரி முஸ்லிம் பெண்கள் அரசியல் நடவடிக்கைகளில் ஈடுபடுவதோ பாராளுமன்ற உறுப்பினர் அல்லது அமைச்சராக வருவதோ ஊக்குவிக்கக் கூடிய விடயம் இல்லை என்றும், அதில் இஸ்லாமிய ஷரீஆவுக்கு முரண்படக் கூடிய விடயங்கள் அதிகம் இருப்பதாக்கவுமே அவர் கூறியிருந்தார். உதாரணமாக ஆண்களுடன் கைகுலுக்க வேண்டிய சந்தர்ப்பங்களையும், மஹ்றம் ஒருவர் இல்லாத நிலையில் உத்தியோகபூர்வ பேச்சுவார்த்தைகளில் வேறு ஆண்களுடன் தனியிடத்தில் ஈடுபட வேண்டிய சந்தர்ப்பங்களையும் அவர் குறிப்பிட்டிருந்தார்.
மேற்கூறப்பட்ட காரணங்கள் உட்பட பல்வேறு காரணங்களுக்காக இஸ்லாம் பெண்கள் அரசியலில் ஈடுபடுவதை அனுமதிக்கவோ ஊக்குவிக்கவோ இல்லை என்று அப்போது தெளிவாக குறிப்பிட்ட சாக்கிர் நாயிக் அவர்கள், மாறாக முஸ்லிம் பெண்கள் மார்க்க வரம்புகளை பாதிக்காத வண்ணம் சேவையாற்றக்கூடிய கல்வித்துறை மற்றும் ஏனைய திணைக்கள உயர்பதவிகளை வகிக்கலாம் என்றும்  சாக்கீர் நாயிக் கூறினார் என அப்பட்டமான பொய்யை தெரிவித்துள்ளார்.
டாக்டர் சாகிர் நாயிக் கூறிய விடயத்தை அவர் கூறவில்லை என செயலாளர் பஸ்லுள் ஜிப்ரி கூறுவதற்கு காரணம் என்ன?
டாக்டர் சாகிர் நாயிக் அவர்கள் எழுதிய ‘இஸ்லாம் வழங்கும் பெண்ணுரிமைகள் எனும் நூலில் 48, மற்றும் 49ம் பக்கங்களில் கூறியதை ஒரு முறை வாசகர்களுக்காகவும் மேற்படி பஸ்லுள் ஜிப்ரி தெளிவாக விளங்கிக் கொள்வதற்காகவும் தருகின்றேன்.
‘இறை நம்பிக்கை கொண்ட ஒருவருக்கொருவர் உற்ற தோழர்கள் ஆவர். அவர்கள் நன்மையை ஏவுகிறார்கள், தீமைகளை விட்டும் தடுக்கின்றார்கள். தொழுகையை நிலைநாட்டுகிறார்கள், ஜகாத்தை முறைப்படி வழங்ககுகிறார்கள். அல்லாஹ்வுக்;கும் அவனுடைய தூதருக்கும் கீழ்படிகிறார்கள். இத்தகையோர் மீதான அல்லாஹ் கிருபை செய்கின்றான். ஆல்லாஹ்வோ ஆற்றல் பொருந்தியவனாகவும் ஞானம் மிக்கவனாகவும் உள்ளான்’   (அல்குர்ஆன் 9:71)
ஆண்களும் பெண்களும் சமூதாயக்களத்தில் மட்டுமல்லாமல் அரசியல் களத்திலும் ஒருவருக்கொருவர் பரஸ்பரம் ஒத்துழைப்பையும் ஒத்தாசையையும் வழங்கிக் கொள்கிறார்கள். உற்ற தோழர்களாக திகழுகிறார்கள். அரசியல் நடவடிக்கைகளிலும் தமது கருத்தை வெளிப்படுத்தும் சுதந்திரத்தை இஸ்லாம் பெண்களுக்கு வழங்கியுள்ளது.
அத்தியாயம் மும்தஹினாவில்……
‘நபியே இறை நம்பிக்கை கொண்ட பெண்கள் உம்மிடம் வந்து அல்லாஹ்வோடு எதனையும் இணையாக்க மாட்டோம் குழந்தைகளைக் கொல்ல மாட்டோம் கைகால்களுக்கு இடையே அவதுறை இட்டுக்கட்டிச் சொல்ல மாட்டோம் நன்மையான செயல்களில் உங்களுக்கு மாறு செய்ய மாட்;டோம். என்றும் உறுதிப்பிரமாணம் செய்தால் அவர்களோடு நீங்களும் உறுதிப்பிரமாண ( பை அத்) செய்து கொள்வீராக! அவர்களுக்காக இறைவனிடம் பாவ மன்னிப்புக் கோருவீராக! அல்லாஹ் மன்னிப்பவனாகவும் கிருபை காட்டுபவனாகவும் உள்ளான்.’ (அல்குர்ஆன் 60:12)
இங்கு ‘பை அத்’ என்ற சொல் பயன்படுத்தப்பட்டுள்ளது. பை அத் என்றால் இக்காலத்தில் நடைபெறும் தேர்தலையும் கருத்தில் கொள்ளலாம். இறைவனின் தூதர் அல்லாஹ்வின்தூதராகவும் இருந்தார்கள். ஆட்சியை நிர்வகிக்கும் தலைமை ஆட்சியாளர்களாகவும் இருந்தார்கள். அவர்களது ஆட்சி தலைமையை அங்கீகரிக்கும் ஒரு நிகழ்வாகவே பைஅத் கருதப்பட்டது. அப்படியெனில் அக்காலத்தில் இஸ்லாம் பெண்களுக்கு ஓட்டுரிமையையும் வழங்கியிருக்கின்றது.
சட்டமியற்றும் சபைகளில் கலந்து கொள்வதற்கான அனுமதியையும் பெண்களுக்கு இஸ்லாம் வழங்கியிருக்கின்றது. ஆதரபூர்வமான ஓர் அறிவிப்பின்படி……………..என்று அந்த நூலில் விடயம் தொடாந்து செல்கின்றது.
அவர் எழுதிய முஸ்லிம் பெண்களும் அரசியலும் எனும் இன்னுமொரு நூலிலும் அவர் முஸ்லிம் பெண்கள் அரசியலில் ஈடுபடுவதற்குரிய இஸ்லாமியப் பார்வை குறித்து தெளிவாக விளக்கியுள்ளார்.
டாக்டர் சாகிர் நாயிக் உடன் நான் நிற்பது போன்ற புகைப்படமும் போலியானது எனவும் அதை கணணியில் என்னையும் இணைத்து பிரசுரிக்கப்பட்டுள்ளது எனவும் பஸ்லுல் ஜிப்ரி தெரிவித்துள்ளார்.
இதுவும் அவர் கூறும் அப்பட்டமான பொய்யாகும். டாக்டர் சாகிர் நாயக்குடன் இடம் பெற்ற சந்திப்பு முடிவடைந்த பின்னர் புகைப்படம் எடுக்கப்பட்டது. அந்த புகைப்படத்தில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரசின் தலைவரும் நீதியமைச்சருமான  றஊப் ஹக்கீம் மற்றும் அவரது சகோதரர் டாக்டர் ஹபீஸ், மற்றும் டாக்டர் சாகிர் நாயக்கின் செயலாளர் என தன்னை கூறிக்கொள்ளும் பஸ்லுள் ஜிப்ரி உட்பட அமைச்சர் றஊப் ஹக்கீமின் மனைவி அவரது பிள்ளைகள் சகோதரரின் மனைவி மற்றும் நான் ஆகியோர் நிற்கின்றோம்.
அந்த புகைப்படத்தில் அமைச்சர் றஊப் ஹக்கீமின் மனைவி அவரது பிள்ளைகள்,சகோதரரின் மனைவி ஆகியோர் நிற்பதால் அந்த புகைப்படத்தை ஊடகங்களில் வெளியிட வேண்டாமென அமைச்சர் ஹக்கீமின் சகோதரரும் அமைச்சரின் ஊடக ஆலோசகருமான டாக்டர் ஹபீஸ் கேட்டுக் கொண்டதால் அவரின் மனைவி மற்றும் பிள்ளைகளின் படத்தை நீக்கி விட்டு எனது படத்தை மாத்திரம் இணைத்து அனுப்பினேனே தவிர நான் கணணியில் எனது படத்தை சேர்க்கவில்லை. மேற்படி பஸ்லுல் ஜிப்ரி புகைப்படத்தில் நின்று கொண்டு இவ்வாறு எழுதியிருப்பது எனக்கு ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது
அந்த புகைப்படம் எடுக்கும் போது பஸ்லுல் ஜிப்ரி அந்த புகைப்படத்துக்கு காட்சியளிக்கவில்லையா என நான் கேட்கவிரும்புகின்றேன்.
இந்த நிலையில் டாக்டர் சாகிர் நாயக்கின் செயலாளர் எனக் கூறிக் கொள்ளும் பஸ்லுல் ஜிப்ரி இவ்வாறு உண்மைக்கு புறம்பான விடயத்தை ஏன் எழுதியுள்ளார்?
உலக இஸ்லாமிய அரங்கில் இன்று அனைவராலும் மதிக்கப்படுகின்ற டாக்டர் சாகிர் நாயக்கின் சர்வதேச விவகாரங்களுக்கான செயலாளர் என கூறிக் கொள்ளும் இவர் ஏன் டாக்டர் கூறிய விடயத்தை மாற்றி கருத்து வெளியிட்டுள்ளார்.
அப்படியானால் டாக்டர் சாகிர்நாயக் எழுதிய முஸ்லிம் பெண்கள் தொடர்பான  மேற்படி நூல்கள் பொய்யானவையா, அதற்கு கொடுத்துள்ள அல்குர் ஆன் வசனங்களும் அதற்கான விரிவுரைகளும் பொய்யானவையா என நான் கேட்க விரும்புகின்றேன்.kattankudy.
எனவே  நான் அரசியலில் ஈடுபடுபவர் என்பதை விட சமூகத்தில் பல் வேறு தேவைகளையுடைய வறிய வாழ்விழந்த, வாழ்வாதாரமில்லாத கைவிடப்பட்ட பெண்களுக்கு மாணவர்களுக்கு இஸ்லாமிய அடிப்படையில் உதவி வருகின்றேன்.
புனித இஸ்லாமிய மார்க்கத்தை பயன் படுத்தி அரசியல் செய்ய வேண்டும் அல்லது அரசியல் இலாபமீட்ட வேண்டுமென்ற எந்த தேவையும் எனக்கில்லை.
இந்த நிலையில் பஸ்லுல் ஜிப்ரி அனுப்பிய மின்னஞ்சலை வைத்து காத்தான்குடி இன்போ என்னை கண்டித்து செய்திவெளியிட்டதானது எனக்கு கவலையை ஏற்படுத்தியுள்ளது.
காத்தான்குடி இன்போ மக்கள் ஊடகமாகவும் சம நிலை ஊடகமாகவும் செயற்பட்டு வரும் நிலையில் குறித்த எனது செய்தியில் பக்க சார்பாக நடந்து கொண்டதானது வேதனையை தருகின்றது.
ஊடக சம நிலையையும் பக்க சார்பற்ற தன்மையையும் வெளிப்படுத்தும் வகையில் என்னிடம் அல்லது இந்த செய்தியை தங்களுக்கு வழங்கிய உங்களின் செய்தியாளரிடம் இந்த செய்தி தொடர்பிலான உண்மைத்தன்மையை கேட்டு அதன் பின்னர் குறித்த செய்தியை வெளியிட்டிருக்க வேண்டும்.
அவ்வாறில்லாமல் எடுத்த எடுப்பிலேயே என்னை கண்டித்திருப்பதானது உங்கள் செய்தியாளர்கள் மீதான நம்பிக்கையீனத்தையே காட்டுகின்றது.
இருந்தாலும் காத்தான்குடி இன்போ கடந்த காலங்களில் எனது சமூகசேவைக்கு தந்த பங்களிப்பையும் நான் நன்றியுடன் இவ்விடத்தில் நினைவு கூறுகின்றேன் என அதில் மேலும் தெரிவித்துள்ளார்

No comments:

Post a Comment

உங்கள் கருத்துக்கள் வரவேற்கப்படுகின்றன.

ADD TEXT HERE