(கெலும் பண்டார)
அரசியலமைப்புக்கு கொண்டுவரப்பட்ட 13ஆவது திருத்தத்தின்படி மாகாணசபைகளுக்கு கையளிக்கப்பட்ட அதிகாரங்களை திருப்பி எடுக்கும் முயற்சி என பலரும் கருத்து தெரிவித்த திவிநெகும பற்றிய நிலைவரங்களை இந்தியா அவதானித்து வருகின்றது என தமிழ்த் தேசிய கூட்டமைப்பு தெரிவித்தது.
இந்திய பிரதமர் மன்மோகன்சிங், வெளிவிவகார அமைச்சர் எஸ்.எம்.கிருஷ்ணா ஆகியோரிடம் பேசியபின், தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் தூதுக்குழு நேற்று முன்தினம் ஞாயிற்றுக்கிழமை நாடு திரும்பியது.
அரசாங்கத்துடனான பேச்சுவார்த்தைகள் தடைப்பட்டதற்கான காரணங்களை இந்திய தலைவர்களுக்கு விளக்கியதாக தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்தார்.
அதிகாரப் பகிர்வுக்கான முன்மொழிவுகள் அடங்கியதும் முன்பு ஆக்கப்பட்டுள்ளதுமான ஐந்து ஆவணங்களின் அடிப்படையில் அரசாங்கம் ஒப்புக்கொண்டபடி பேச்சுக்களை தொடர வேண்டுமெனவும் அவர் கூறினார்.
மங்கள முனசிங்க தெரிவுக்குழு அறிக்கை, முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா குமாரதுங்கவின் ஆட்சியின்போது 1995, 1997, 2000ஆம் ஆண்டுகளில் உருவாக்கப்பட்ட மூன்று ஆவணங்கள், அனைத்துக்கட்சி பிரதிநிதி குழுவால் தயாரிக்கப்பட்ட பெரும்பான்மை அறிக்கை என்பவையே பேச்சுவார்த்தைக்கு அடிப்படையாக ஏற்றுக்கொள்ளப்பட்ட ஐந்து ஆவணங்களாகும்.
இருபக்க பேச்சுவார்த்தையை தொடர அரசாங்கம் சம்மதித்ததில் மட்டுமே நாம் நாடாளுமன்ற தெரிவுக்குழுவில் பங்குபெறுவோம். இந்த கருத்தாடலில் எட்டப்பட்ட உடன்பாடுகளை தெரிவுக்குழுவின் கருத்துக்காக கொண்டுபோகலாம் என அவர் கூறினார்.
திவிநெகும சட்டமூலத்தை தமிழ்த் தேசிய கூட்டமைப்பு இந்தியாவின் கவனத்துக்கு கொண்டுசென்றதா என கேட்டபோது, 'இலங்கை அரசாங்கம் அதிகாரத்தை கையளிப்பதற்கு பதிலாக அதிகாரத்தை எடுத்துக்கொள்ளும் எதிர்மாறான வேலையை செய்வதை விளக்கவே தனது கட்சி திவிநெகும பற்றி கூறியதாக' அவர் கூறினார்.
இந்தியாவுக்கு இந்த சட்டமூலம் பற்றி ஏற்கனவே தெரியும் எனவும் அவர் சுட்டிக்காட்டினார். 13ஆவது திருத்தம் முழுமையாக அமுலாக்க வேண்டுமென்பதில் இந்தியா உறுதியாக உள்ளது எனவும் சுமந்திரன் எம்.பி. குறிப்பிட்டார்.
இந்த சந்திப்பில் பங்குபற்றிய த.தே.கூ.வின் நாடாளுமன்ற உறுப்பினர் சுரேஷ் பிரேமசந்திரன், 'இந்தியா திவிநெகும சட்டமூலம்பற்றி உன்னிப்பாக கவனித்து வருகின்றது' என்று குறிப்பிட்டார்.
அரசாங்கம், அதிகாரப்பகிர்வில் இதய சுத்தியுடள் ஈடுபாடு காட்டவில்லை என அவர் மேலும் குறிப்பிட்டார்.

No comments:
Post a Comment
உங்கள் கருத்துக்கள் வரவேற்கப்படுகின்றன.