......................................................................................................முழு நாலும், முழு நாளும்

பின்னூட்டங்களை வரவேற்கின்றோம்....

உங்கள் பின்னூட்டங்களை வரவேற்கின்றோம்.... ninthavurinfo@gmail.com
தினச் செய்திகள்

Tuesday, 16 October 2012

அஷ்ரப் வைத்தியசாலை ஊழியர்கள் தாக்கப்பட்டமை தொடர்பில் நிலவிய குழப்ப நிலைக்கு சுமூகமான தீர்வு


(எஸ்.எம்.எம்.றம்ஸான்)
கல்முனை அஷ்ரப் ஞாபகார்த்த வைத்தியசாலையின் ஊழியர்கள் அண்மையில் தாக்கப்பட்டமை தொடர்பில் நிலவிய குழப்ப நிலைமையை சமரசமாக தீர்த்து வைக்கும் முயற்சி நேற்று ஞாயிற்றுக்கிழமை மேற்கொள்ளப்பட்டது. 

இவ் ஊழியர்கள் தாக்கப்பட்டமையைக் கண்டன ஆர்ப்பாட்டமும் இடம்பெற்றது. 

சர்வசமய அமைப்பின் தலைவர் டாக்டர் எம்.ஐ.எம்.ஜெமீலின் ஏற்பாட்டில் வைத்தியசாலையின் வைத்திய அத்தியட்சகர் ஏ.எம்.நஸீர் தலைமையில் இச்சமரச முயற்சி மேற்கொள்ளப்பட்டது. 

வைத்தியசாலையின் வைத்தியர்கள், தாதியர்கள், ஊழியர்கள் உட்பட தாக்குதலுடன் சம்மந்தப்பட்ட எதிர்த்தரப்பினர்களும் இச்சமரச முயற்சிக்கான  கலந்துரையாடலில் கலந்துகொண்டனர். இறுதியில் இரு சாராருக்கும் இடையில் சமரசம் காணப்பட்டது. 

No comments:

Post a Comment

உங்கள் கருத்துக்கள் வரவேற்கப்படுகின்றன.

ADD TEXT HERE