......................................................................................................முழு நாலும், முழு நாளும்

பின்னூட்டங்களை வரவேற்கின்றோம்....

உங்கள் பின்னூட்டங்களை வரவேற்கின்றோம்.... ninthavurinfo@gmail.com
தினச் செய்திகள்

Tuesday, 16 October 2012

ஆற்றில் மூழ்கி சிறுமி உயிரிழப்பு

அம்பாறை மாவட்டத்தின் ஒலுவில் பகுதியிலுள்ள களியோடை ஆற்றில் விறகு பொறுக்கிக்கொண்டிருந்த சிறுமியொருவர் நேற்று ஞாயிற்றுக்கிழமை மாலை 3 மணியளவில் ஆற்றில் மூழ்கி உயிரிழந்துள்ளார். 


ஒலுவில் அஷ்ரப் நகரைச் சேர்ந்த ஐ.ஹானா (வயது 13) என்ற சிறுமியே இவ்வாறு உயிரிழந்தவராவார். 

இச்சிறுமியும் இவரது தாயும் இரு சகோதரர்களும் களியோடை ஆற்றில் விறகு பொறுக்கிக்கொண்டிருந்தபோது, இவர் ஆற்றில் மூழ்கியதாக அக்கரைப்பற்று பொலிஸார் தெரிவித்தனர். 

சடலம் பிரேத பரிசோதனைக்காக அக்கரைப்பற்று வைத்தியசாலையில் ஒப்படைக்கப்பட்டுள்ளது. 

இது தொடர்பான விசாரணையை அக்கரைப்பற்று பொலிஸார் முன்னெடுத்துள்ளனர். 

No comments:

Post a Comment

உங்கள் கருத்துக்கள் வரவேற்கப்படுகின்றன.

ADD TEXT HERE