நாட்டில் தற்காலி கமாகத் தடைசெய்ய ப்பட்டி ருக்கும் கொரக்ஸ் பாணி மருந்து கொழும்பில் சில தனியார் தேனீர் மற்றும் சாப்பாட்டு கடைகளிலும் தொடர்பாடல் நிலையங்களிலும் கள்ளச்சாராயம் போன்று மறைத்து வைத்து கண்ணாடி கிண்ணங்களில்
ஊற்றி விற்பனை செய்யப்படுவதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. இது தொடர்பான புகார்கள் சுகாதார அமைச்சுக்குக் கிடைத்த வண்ணமுள்ளதாக சுகாதார அமைச்சின் அதிகாரியொருவர் நேற்றுத் தெரிவித்தார்.
இப்புகார்களின் அடிப்படையில் சுகாதார அமைச்சின் திடீர் தேடுதல் பிரிவினரும், தேசிய மருந்து பொருள் அதிகார சபை அதிகாரிகளும் இணைந்து தேடுதல்களை ஆரம்பித்திருப்பதாகவும் அவ்வதிகாரி கூறினார்.
இத்தேடுதலின் போது மது மற்றும் போதைப் பொருள் பாவனைக்கு அடிமையானவர்களை அவற்றிலிருந்து விடுவிப்பதற்காக நடத்தப்படுகின்ற நிலையமொன்றிலிருந்து இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர் எனவும் அவர் கூறினார்.
மது மற்றும் போதைப் பொருள் பாவனைக்கு அடிமையானவர்கள் இந்நிலையத்திற்கு அழைத்து வரப்பட்டு கொரக்ஸ் டி பாணி மருந்துக்கு அடிமையாக்கப்பட்டுள்ளார்கள் என்பது ஆரம்ப விசாரணைகளில் தெரிய வந்துள்ளது. இந்நிலையத்திலிருந்து கைது செய்யப்பட்டிருக்கும் இருவருக்கும் எதிராக நீதிமன்றத்தில் வழக்குத் தாக்கல் செய்யப்படும் என்றும் அவர் குறிப்பிட்டார்.
தற்காலிகமாகத் தடை செய்யப்பட்டிருக்கும் இந்த கொரக்ஸ் டி பாணி மருந்தை சட்டவிரோதமாக விற்பனை செய்பவர்களைத் தேடி கைது செய்யும் நடவடிக்கை தொடர்ந்தும் முன்னெடுக்கப்படும் எனவும் அவர் மேலும் கூறினார்.thinakaran
No comments:
Post a Comment
உங்கள் கருத்துக்கள் வரவேற்கப்படுகின்றன.