ஈரானின் அணு ஆயுதத் திட்டம் குறித்து அந்நாட்டுடன் பேச்சுவார்த்தை நடத்தத் தயாராக இருப்பதாக அமெரிக்கா தெரிவித்துள்ளது.
அணு ஆயுதப் பரவல் தடுப்பு ஒப்பந்தத்தில் பல ஆண்டுகளுக்கு முன்பே ஈரான் கையெழுத்திட்டது.
இந்த ஒப்பந்தப்படி ஏராளமான நிதி உதவிகளையும் சலுகைகளையும் பெற்ற அந்நாடு, அணு ஆயுதங்களைத் தயாரிக்க மாட்டோம் என்று வாக்குறுதி அளித்தது.
ஆனால், அதற்கு மாறாக ஈரான் தற்போது அணு ஆயுத உற்பத்தியில் ஈடுபட்டிருப்பதாக அமெரிக்கா உள்ளிட்ட மேற்கத்திய நாடுகள் குற்றம் சாட்டி வருகின்றன. இதை ஈரான் மறுத்து வருகிறது.
எனினும், அந்நாடு ரகசியமாக அணு ஆயுதத் தயாரிப்பில் ஈடுபட்டுள்ளதால் அதன் மீது அமெரிக்கா கடுமையான பொருளாதாரத் தடைகளை விதித்துள்ளது. ஈரான் மீது ராணுவத் தாக்குதல் நடத்துவது குறித்தும் பரிசீலிக்கப்பட்டது.
இந்நிலையில், இந்த விவகாரம் தொடர்பாக பேச்சுவார்த்தை நடத்த அமெரிக்காவும் ஈரானும் கொள்கை அளவில் ஒப்பந்தம் செய்து கொண்டுள்ளதாக நியூயார்க் டைம்ஸ் நாளிதழ் செய்தி வெளியிட்டுள்ளது. மேலும், "இந்த ஒப்பந்தம் அமெரிக்க அதிபர் ஒபாமாவின் பதவிக்காலம் தொடங்கியபோது முதலில் நடத்தப்பட்டது.
அமெரிக்க அதிபர் தேர்தல் வரை பேச்சுவார்த்தையை நிறுத்தி வைக்க வேண்டும் என்று ஈரான் அதிகாரிகள் வலியுறுத்தியுள்ளனர்.
இது குறித்த செய்தி அமெரிக்க அதிபர் தேர்தலுக்கு இன்னும் இரண்டு வாரமே உள்ள இப்போதுதான் வெளியில் கசிந்துள்ளது.
பேச்சுவார்த்தை தொடர்பாக இரு தரப்பும் செய்து கொண்டுள்ள ஒப்பந்தத்தின் நகல்கள், அமெரிக்கப் பிரதிநிதிகள் அடங்கிய சிறிய குழுவிடம் அளிக்கப்பட்டுள்ளது' என்று நியூயார்க் டைம்ஸ் வெளியிட்ட செய்தி தெரிவித்துள்ளது.
எனினும், இந்தச் செய்தியை அமெரிக்கா மறுத்துள்ளது. அந்நாட்டின் தேசியப் பாதுகாப்பு கவுன்சில் செய்தித் தொடர்பாளர் டாமி வீட்டர் கூறுகையில், ""அதிபர் தேர்தலுக்குப் பிறகு அமெரிக்காவும் ஈரானும் பேச்சுவார்த்தை நடத்த ஒப்புக் கொண்டுள்ளதாகக் கூறப்படுவது உண்மையல்ல.
எனினும் ஈரானின் அணு ஆயுதத் திடடம் குறித்து அந்நாட்டுடன் பேச்சுவார்த்தை நடத்த ஒபாமா நிர்வாகம் தயாராகவே உள்ளது.
இரு தரப்பு சந்திப்புகளை நடத்தத் தயாராக இருக்கிறோம் என்று ஆரம்பத்தில் இருந்து கூறி வருகிறோம்'' என்றார்.in.press
No comments:
Post a Comment
உங்கள் கருத்துக்கள் வரவேற்கப்படுகின்றன.