......................................................................................................முழு நாலும், முழு நாளும்

பின்னூட்டங்களை வரவேற்கின்றோம்....

உங்கள் பின்னூட்டங்களை வரவேற்கின்றோம்.... ninthavurinfo@gmail.com
தினச் செய்திகள்

Monday, 22 October 2012

எக்னெலிகொட காணாமல் போய் 1000 நாட்கள்

சுயாதீன ஊடகவியலாளரும் கேலிச்சித்திர கலைஞருமான பிரகீத் எக்னெலிகொட காணாமல் போய் இன்றுடன் 1000 நாட்கள் பூர்தியாகின்றன. 


இதனை முன்னிட்டு காணாமற் போனோரை தேடியறியும் குழுவின் ஏற்பாட்டில் இன்று திங்கட்கிழமை பிற்பகல், சர்வதேச மனித உரிமை ஆணைக்குழு அலுவலகத்துக்கு முன்னால் சத்தியாகிரகப் பொராட்டமொன்று நடத்தப்படவுள்ளது. 

இந்த சத்தியாகிரகப் போராட்டத்தில் எக்னெலிகொடவின் மனைவி சந்தியா எக்னெலிகொட உட்பட காணாமல் போனோரின் உறவினர்கள் பலரும் கலந்துகொள்ளவுள்ளனர். 

மேற்படி சத்தியாக்கிரகத்தின் முடிவில் சர்வதேச மனித உரிமை ஆணைக்குழு பிரதிநிதிகளிடம் மகஜர் ஒன்றை கையளிக்கவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. 

அந்த மகஜரில், தடுத்து வைத்திருக்கின்றவர்களின் பட்டியலை வெளியிடல், சகலவிதமாக காணாமல்போதல்களையும் தேடிப்பார்ப்பதற்குமற்றும் சர்வதேசத்துக்கு உத்தரவாதத்தை சொல்வதற்குமான சுயாதீன ஆணைக்குழுவொன்றை ஏற்படுத்துதல், காணாமல் போதல் தொடர்பாக தேடிப்பார்க்கும் ஐக்கிய நாடுகள் சபையின் செயற்குழு, காணாமல் போனவர்கள் தொடர்பான தேடிப்பார்ப்பதற்கு தேவையான வசதிகளை ஏற்படுத்துதல் மற்றும் காணாமல் போகச் செய்தல் குற்றவியல் என்பதை சட்டமாக்குதல் போன்ற கோரிக்கைகள் முன்வைக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. tamilmirror

No comments:

Post a Comment

உங்கள் கருத்துக்கள் வரவேற்கப்படுகின்றன.

ADD TEXT HERE