......................................................................................................முழு நாலும், முழு நாளும்

பின்னூட்டங்களை வரவேற்கின்றோம்....

உங்கள் பின்னூட்டங்களை வரவேற்கின்றோம்.... ninthavurinfo@gmail.com
தினச் செய்திகள்

Monday, 22 October 2012

உலக சக்தி வள மாநாடு இன்று டுபாயில் ஆரம்பம்!


presidentஉலக சக்தி வள மாநாடு இன்று டுபாயில் ஆரம்பமாகிறது. இம்மாநாட்டில் பங்கு கொள்வதற்காக ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ  நேற்று மாலை பயணமானார்.



ஜனாதிபதியின் பாரியார் ஷிரந்தி ராஜபக்ஷ ,வெளிவிவகார அமைச்சர் பேராசிரியர் ஜீ.எல்.பீரிஸ்,
பாராளுமன்ற உறுப்பினர் சஜின்வாஸ் குணவர்த்தன, மேல்மாகாணசபை உறுப்பினர் நவுஸர் பெளசி, ஜனாதிபதியின் செயலாளர் லலித் வீரதுங்க ஆகியோர் இம்மாநாட்டில் கலந்துகொள்வதற்காக ஜனாதிபதியுடன் பயணமாகியுள்ளனர்.


டுபாய் சர்வதேச மாநாட்டு மற்றும் கண்காட்சி மத்திய நிலையத்தில் இரண்டு நாட்கள் நடைபெறவுள்ள உலக சக்திவள அரச தலைவர்கள் மாநாட்டுக்கு இணையாக அரச தலைவர்களின் பாரியார்களது மாநாட்டையும் நடாத்துவதற்கு டுபாய் அரசாங்கம் தீர்மானித்துள்ளது.


அரச தலைவர்கள் 21 பேரின் தலைமையில் நடைபெறும் உலக சக்தி வள மாநாட்டில் சகல நாடுகளையும் சார்ந்த 2000ற்கும் மேற்பட்ட பிரதிநிதிகள் பங்குபற்றுகின்றனர்.

உலகின் நிலையான அபிவிருத்திக்காக சுற்றாடலை மாசுபடுத்தாமல் பாதுகாப்பான சக்திவளத்தை பயன்படுத்துதல் என்ற நோக்கில் 2008ஆம் ஆண்டில் உலக சக்தி வள ஒன்றியம் ஸ்தாபிக்கப்பட்டது.


உலக சக்திவள நெருக்கடிக்குத் தீர்வைத்தேடுதல், சக்திவள தொழில்நுட்ப மேம்பாடு மற்றும் எதிர்கால சக்திவளப் பாதுகாப்புக்காக சேதன சக்திவளத்தைப் மேம்படுத்துதல் போன்ற காரணங்களை இந்த ஒன்றியம் நோக்காகக் கொண்டுள்ளது.


இந்தத் தேவையை நிறைவேற்றிக் கொள்வதற்காக நியூயோர்க் நகரிலுள்ள ஐக்கிய நாடுகள் சபையின் தலைமையகத்தில் சக்தி வளத்துறை முக்கியஸ்தர்கள் மற்றும் அரச தலைவர்கள் ஒன்றுகூடி இதுவரை இரண்டு மாநாடுகளை நடத்தியுள்ளனர்.


இருப்பு மற்றும் அரசியல் ஸ்திரத்தன்மை ஆகியவற்றைக் கவனத்தில்கொண்டு மூன்றாவது உலக சக்திவள மாநாட்டை டுபாய் நாட்டில் நடாத்துவதற்குத் தீர்மானிக்கப்பட்டுள்ளது. இது ஐக்கிய நாடுகள் அமைப்பின் தலைமையகத்துக்கு வெளியே நடைபெறும் முதலாவது மாநாடாகும்.


இதேவேளை, இம்மாநாட்டைத் தொடர்ந்தும் வருடா வருடம் ஒக்டோபர் 22ஆம் திகதியை உலக சக்திவள தினமாக பிரகடனப்படுத்தி கொண்டாடவேண்டுமென டுபாயின் உபஜனாதிபதியும், பிரதமரும், ஆட்சியாளருமான ஷேக் முகமட் பின் ரiட் அல் மக்தோம் யோசனையொன்றை முன்வைத்துள்ளார். (அரசாங்க தகவல் திணைக்களம். )

No comments:

Post a Comment

உங்கள் கருத்துக்கள் வரவேற்கப்படுகின்றன.

ADD TEXT HERE