நிந்தவூரைச் சேர்ந்த அப்துல் ஹமீத் திலீப் நவாஸ் அவர்கள் கடந்த ஆண்டு ஜனாதிபதி முன்னிலையில் மேல் முறையீட்டு நீதிமன்ற நீதிபதியாகச் சத்தியப்பிரமாணம் செய்துகொண்டுள்ளார்.
உதுமாலெவ்வை அப்துல் ஹமீத்(ULA மாஸ்டர்),சுலைஹா ஆசிரிய தம்பதிகளின் சிரேஷ்ட புதல்வரான திலீப் நவாஸ் அவர்கள் மேல் முறையீட்டு நீதிமன்ற நீதிபதியாக சத்தியப்பிரமாணம் செய்யும்வரை சட்டமா அதிபர் திணைக்களத்தில் சிறந்த சட்டவாதியாக இருந்ததோடு பிரதி சொலிசிற்றர் ஜெனரலாகவும் கடமை புரிந்துவந்தார்.
மும்மொழிகளிலும் புலமைவாய்ந்த திலீப் நவாஸ் அவர்கள் கடந்த காலங்களில் அரசாங்கத்தின் சார்பில் ஜெனீவா மாநாடுகளில் பங்குகொண்டதோடு மட்டுமல்லாது நீதி விவகாரங்கள் மற்றும் சட்டவாக்கத்துறை அமர்வுகளிலும் கலந்துகொண்டுள்ளார்.
ஜனாப்.நவாஸ் அவர்கள் தன்னுடைய சட்ட முதுமாணிப் பட்டப் படிப்பை பிரசித்தமான லண்டன் கிங்ஸ் கல்லூரியிலும்,Fellowship in Law பட்டத்தை அமெரிக்காவிலும் பெற்றுக்கொண்டார்.
இவர் சட்டக் கல்லூரியில் பயின்ற காலங்களில் தலைசிறந்த பேச்சாளராக இருந்ததோடு,சட்டக் கல்லூரியின் தமிழ்ச் சங்க செயலாளராகவும்,கல்லூரி சஞ்சிகையின் ஆசிரியராகவும் பணியாற்றியுள்ளார்.
சட்டக் கல்லூரியினால் ஒழுங்குசெய்யப்பட்ட அறங்கூறுதல் போட்டிகளில் இரண்டு தடவைகள் முதலிடங்களைப் பெற்றுக்கொண்டதுடன்.அந்நிகழ்வுகளில் அப்போது பிரதம அதிதியாக கலந்துகொண்ட நீதியமைச்சரும்,சட்ட நிபுணருமான ல்லித் அத்துலத்முதலி அவர்களினால் வெகுவாகப் பாராட்டப்பட்டு,பரிசில்களும் வழங்கிக் கௌரவிக்கப்பட்டார்.சட்டக் கல்லூரியின் வரலாற்றில் நமது தலைவரும்,பிரபல சட்ட அறிஞரும்,அமைச்சரும்,முஸ்லிம் காங்கிரஸ் தலைவருமான மர்ஹூம் எம்.எச்எம்.அஷ்ரப் அவர்களுக்குப் பின்னர் இவ்வாறான அறங்கூறுதல் போட்டிகளில் முலிடங்களைப் பெற்றவர் திலீப் நவாஸ் அவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
திலீப் நவாஸ் அவர்கள் கல்முனை சாஹிராக் கல்லூரியினதும்,கொழும்பு றோயல் கல்லூரியினதும் பழைய மாணவருமாவார்.
ஜனாப்.திலீப் நவாஸ் அவர்கள் மேல் முறையீட்டு நீதிமன்ற நீதிபதியாக பதவியேற்றுக்கொண்டமையானது அவரை ஈன்றெடுத்த நிந்தவூர் கிராமத்தின் வரலாற்றிலேயே பெருமையும்,பெரு மகிழ்வுக்குரிய நிகழ்வாகும்.இன்றையத் தினத்தில் முழு கிழக்கு மாகாணமுமே பெருமிதமடைந்து நிற்கிறது.
நீங்கள் மேலும் மேலும் உங்கள் துறையில் கரைகண்டு நமது கிராமத்திற்கும்,முஸ்லிம் சமுகத்துக்கும் ஏன் முழு நாட்டிற்கும் பணியாற்றவேண்டுமென ஆசிக்கிறேன்..வாழ்த்துகிறேன்.
கட்டுரையாக்கம் :- A. Shafath Ahmed-Prominent Writer.
(மூலம்: n.news)
No comments:
Post a Comment
உங்கள் கருத்துக்கள் வரவேற்கப்படுகின்றன.