......................................................................................................முழு நாலும், முழு நாளும்

பின்னூட்டங்களை வரவேற்கின்றோம்....

உங்கள் பின்னூட்டங்களை வரவேற்கின்றோம்.... ninthavurinfo@gmail.com
தினச் செய்திகள்

Thursday, 1 August 2013

அமெ. ரகசிய ஆவணங்களை கசியவிட்ட இராணுவ வீரர் குற்றவாளியாக தீர்ப்பு

அமெரிக்காவின் ஆயிரக் கணக்கான இரகசிய ஆவணங்களை கசியவிட்ட அந்நாட்டு இராணுவ வீரர் பிரட்லி மன்னிங் உளவுபார்த்த குற்றச்சாட்டில் குற்றவாளியாக காணப்பட்டுள்ளார்.
இராணுவ நீதிமன்றத்தில் நேற்று முன்தினம் ஆஜர்படுத்தப்பட்ட மன்னிங் கணனி மோசடி, களவு உட்பட மொத்தமாக 20 குற்றச்சாட்டுகளில் குற்றவாளியாக காணப்பட்டார். ஆனால் மிகக் கடுமையான குற்றமான ‘எதிரிக்கு உதவுதல்’ என்ற விடயத்தில் அவர் குற்றங்காணப்படவில்லை.

25 வயதான மன்னிங், விக்கிலீக்ஸ் இணையத் தளத்துக்கு ஆயிரக் கணக்கான இராணுவத் தகவல்களை கசியவிட்டதை ஒப்புக் கொண்டபோதும், அமெரிக்க வெளியுறவுக் கொள்கை குறித்த விவாதத்தை தான் தூண்டவில்லை என்று கூறியுள்ளார்.
மன்னிங் கசியவிட்ட தகவல்களில் ஈராக் தலைநகர் பக்தாத்தில் 2007 ஆம் ஆண்டு அமெரிக்க ஹெலிகொப்டர் குண்டு போட்டதன் வீடியோவும் உள்ளடங்குகிறது. இந்த குண்டுத் தாக்குதலில் ராய்ட்டர் செய்தியாளர் உட்பட பல அப்பாவி பொதுமக்கள் கொல்லப்பட்டனர். தவிர 4,70,000 ஆப்கான், ஈராக் யுத்த அறிக்கைகள் 250,000 வொஷிங்டனுக்கும் அமெரிக்க தூதரகங்களுக்கும் இடையிலான அறிக்கைகளும் மன்னிங் கசியவிட்ட அறிக்கைகளுள் உள்ளடங்குகிறது.
அமெரிக்க வரலாற்றில், இந்த ரகசிய தகவல் இதுவரை காலத்தில் மிகப்பெரியதாகக் கருதப்படுகிறது. மன்னிங் மீதான குற்றங்களுக்கு அவருக்கு 136 வருடங்கள் வரை சிறைத் தண்டனை விதிக்கப்பட வாய்ப்பு உள்ளது. எனினும் மன்னிங் குற்றவாளியாக காணப்பட்டுள்ளமை ஒரு ஆபத்தான முன்மாதிரி என்று விக்கிலீக்ஸ் நிறுவனரான ஜூலியன் அசாஞ்ச் கண்டித்துள்ளார்.


(மூலம்: http://www.thinakaran.lk/2013/08/01/?fn=w1308016 )

No comments:

Post a Comment

உங்கள் கருத்துக்கள் வரவேற்கப்படுகின்றன.

ADD TEXT HERE