பி. எல். ஓ. வில் இருக்கும் மக்கள் ஆதரவு பெற்ற பலஸ்தீன விடுதலை முன்னணி, தற்போது ஆரம்பிக்கப்பட்டிருக்கும் பேச்சுவார்த்தை மஹ்மூத் அப்பாஸின் தன்னிச்சையான முடிவு என்று குறிப்பிட்டுள்ளது. பி.எல். ஓவில் இருக்கும் அனைத்து தரப்பினரது ஆதரவை பெறுவதில் அவர் தோல்வி அடைந்திருப்பதாகவும் குற்றஞ்சாட்டியுள்ளது.
மேற்படி முன்னணி அமைதிப் பேச்சுவார்த்தை மீள ஆரம்பிப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து கடந்த சனிக்கிழமை ரமல்லாவில் ஆர்ப்பாட்டம் ஒன்றையும் நடத்தியது. “அமெரிக்கா தலைமையிலான இந்த அமைதிப் பேச்சுவார்த்தை 20 ஆண்டுக்கு முன் ஒஸ்லோ பேச்சுவார்த்தை போன்றே இருக்கும்.
எமது விவகாரத்தை அமெரிக்காவின் கைகளில் இருந்து எடுக்க நாம் துல்லியமாக செயற்பட்டு ஐ.நா. செல்லவேண்டும்” என்று மேற்படி முன்னணியின் ஊடக அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. மேற்குக் கரையை ஆளும் பி. எல். ஒ. பலஸ்தீன மக்களின் பிரதிநிதி என்று ஐ.நா. சபை ஏற்றிருப்பது குறிப்பிடத்தக்கது.(மூலம்: http://www.thinakaran.lk/2013/08/01/?fn=w1308015 )
No comments:
Post a Comment
உங்கள் கருத்துக்கள் வரவேற்கப்படுகின்றன.