......................................................................................................முழு நாலும், முழு நாளும்

பின்னூட்டங்களை வரவேற்கின்றோம்....

உங்கள் பின்னூட்டங்களை வரவேற்கின்றோம்.... ninthavurinfo@gmail.com
தினச் செய்திகள்

Monday, 15 July 2013

பேனை ஏந்த வேண்டியவர்கள் பிரபாகரனால் துவக்கை ஏந்தினர்: பந்துல

-நவரத்தினம் கபில்நாத்

தமிழ் மக்களும் அவர்களுடைய பிள்ளைகளும் பேனையும் பென்சிலும் ஏந்தவேண்டிய சந்தர்ப்பத்தில் பிரபாகரனால் துவக்கை ஏந்தவேண்டி ஏற்பட்டது என கல்வி அமைச்சர் பந்துல குணவர்த்தன தெரிவித்தார்.

வவுனியா தமிழ் மத்திய மகா வித்தியாலயத்தில் க.பொ.த உயர்தரப் பரீட்சையில் சித்தியடைந்து பல்கலைக்கழகத்திற்கு தெரிவான மாணவர்களை கௌரவிக்கும் நிகழ்வு நேற்று ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. இதில் பிரதம விருந்தினராக கலந்து கொண்டு உரையாற்றும்போதே அவர் இவ்வாறு கூறினார். 

கல்வி அமைச்சர் பந்துல குணவர்த்தன இங்கு மேலும் உரையாற்றுகையில், 

'தமிழ் மக்களுக்கு இருந்த வளம் கல்வியாகும். குறிப்பிட்ட காலத்திற்கு முன்னர் உயர் பதவியிலிருந்த வைத்தியர்கள், பொறியியலாளர்கள், கணக்காளர்கள், கல்வித்துறை உயர் உத்தியோகத்தர்கள், உயர்ந்த பதவியில் இருந்தவர்கள் அனைவரும் தமிழ் பேசும் மக்களேயாகும்.

எனினும் கடந்த 30 வருடங்களாக தமிழ் பேசும் மக்களுக்கு, மாணவர்களுக்கு, அவர்களின் பெற்றோர்களுக்கு அசாதாரண சூழ்நிலை ஏற்பட்டிருந்தது. இக்காலத்தில் தமிழ் மக்களுக்கு அதிஷ்டதானம் இல்லாத நிலை ஏற்பட்டு பேனையும் பென்சிலும் ஏந்தவேண்டிய சந்தர்ப்பத்தில் பிரபாகரனினால் துவக்கை ஏந்தவேண்டி ஏற்பட்டது. இதனால் அந்த மாணவர்களுக்கு இருந்த உயர்ந்த சந்தர்ப்பங்கள் இல்லாமல் செய்யப்பட்டது.

ஆகையால் தற்போது தமிழ்மொழி மூல பாடசாலைகளில் பட்டதாரி ஆசிரியர்கள், டிப்ளோமா ஆசிரியர்கள் பற்றாக்குறையாக உள்ளது. இவ்வாறான நிலை நான் முகம் கொடுக்கும் முக்கிய பிரச்சினையாக உள்ளது. 

30 வருடகால யுத்தத்தால் பாதிக்கப்பட்ட பாடசாலைகள், கட்டிடங்கள் பலவாக உள்ளன. எனவே அவ்வாறான பாடசாலைகளை பார்வையிடுவதற்கு வருவதற்கு கல்வி அமைச்சில் வசதிகள் இல்லாது இருந்தன.  அவ்வாறான சூழ்நிலைகளால் பல வருடங்களுக்கு பின்னர் ஓர் கல்வி அமைச்சர் பாடசாலைக்கு வரும் நிலை இன்று ஏற்பட்டுள்ளது. அதற்கு சமாதான சூழ்நிலையே காரணம்.

ஆகையால் பிரதேசத்தில் படித்துக்கொண்டிருக்கும் இளைஞர், யுவதிகளுக்கு கண்டி, காலி, கொழும்பு போன்ற மாவட்டங்கள் போல் அனைத்து வசதிகளுடனுமான கல்விச் சூழலை ஏற்படுத்துவதே மஹிந்த சிந்தனையின் நோக்கமாகும். கண்டி, கொழும்பு பாடசாலைகள் போல் சகல வசதிகளுமுடைய பாடசாலையாக 2016ஆம் ஆண்டு இப்பாடசாலையையும் மாற்றி வைப்பேன் என்று உறுதியளிக்கின்றேன்' என்றார். 



(மூலம்: http://tamil.dailymirror.lk/2010-07-14-09-13-23/2010-08-12-10-11-54/2010-08-12-10-13-48/74997-2013-07-15-04-52-12.html )

No comments:

Post a Comment

உங்கள் கருத்துக்கள் வரவேற்கப்படுகின்றன.

ADD TEXT HERE