முன்னாள் பிரதம நீதியரசர் ஷிராணி பண்டாரநாயக்கவுக்கு எதிரான இலஞ்ச ஊழல் குற்றச்சாட்டுத் தொடர்பில் இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவினால் மேற்கொள்ளப்பட்டுள்ள விசாரணைகள் அடங்கிய அறிக்கை நீதிமன்றத்திற்கு சமர்ப்பிக்கப்படவுள்ளதாகத் தெரியவருகிறது.
ஷிராணி பண்டாரநாயக்க தனது அரச சேவைக் காலத்தில் இரகசிய சொத்துக்களை வைத்திருந்தார் என்ற குற்றச்சாட்டின் பேரில் இவருக்கு எதிராக இலஞ்ச ஊழல் விசாரணைகள் ஆணைக்குழுவில் முறைப்பாடு செய்யப்பட்டிருந்தது. இது தொடர்பாக இலஞ்ச ஊழல் ஆணைக்குழு சில மாதங்களாக தகவல்களைத் திரட்டியிருப்பதுடன், பலசுற்று விசாரணைகளையும் நடத்தியிருந்தது.
இந்த விசாரணைகளுக்கு ஷிராணி பண்டாரநாயக்க பல தடவைகள் சமுகமளித்திருந்ததுடன், நேற்று விசாரணைகளுக்கும் அவர் சென்றிருந்தார்.
எனினும், இலஞ்ச ஊழல் தொடர்பில் முன்வைக்கப்பட்ட குற்றச்சாட்டுக்கள் அனைத்தையும் அவர் மறுத்திருப்பதாக நம்பத்தகுந்த வட்டாரங் களிலிருந்து தெரியவருகிறது. இவருக்கு எதிரான விசாரணைகள் இறுதிக் கட்டத்தினை அடைந்துள்ள நிலையில் இது குறித்த அறிக்கையினை நீதிமன்றத்திடம் ஒப்படைப்பது மாத்திரமே எஞ்சியிருப்பதாக ஆணைக்குழு வட்டா ரங்கள் தெரி விக்கின்றன.(மூலம்: http://www.thinakaran.lk/2013/07/17/?fn=n1307171 )
No comments:
Post a Comment
உங்கள் கருத்துக்கள் வரவேற்கப்படுகின்றன.