......................................................................................................முழு நாலும், முழு நாளும்

பின்னூட்டங்களை வரவேற்கின்றோம்....

உங்கள் பின்னூட்டங்களை வரவேற்கின்றோம்.... ninthavurinfo@gmail.com
தினச் செய்திகள்

Wednesday, 17 July 2013

அன்னாசி, தாழை, கரணை கிழங்கு செடிகளில் டெங்கு நுளம்பு பெருக்கம்

மர்லின் மரிக்கார்
சுகாதார அமைச்சின் ஆய்வில் அதிர்ச்சித் தகவல்
766 இடங்களில் ஆய்வு; ரம்பை செடிகளிலும் நுளம்பு பெருகும்

இலங்கையின் மேல் மற்றும் மத்திய மாகாண ங்களில் நுளம்புகள் பெருகக் கூடிய செடிகள் மற்றும் தாவரங்கள் தொடர் பாக நடாத்தப்பட்ட ஆய்வின் அறிக்கை வெளியாகியுள்ளது.

சுகாதார அமைச்சும், ஏனைய அமைச்சுக்களும் நுளம்பு ஒழிப்பு நடவடிக்கைகளைத் தொடர்ந்தும் முன்னெடுத்து வருகின்றன. இருப்பினும் நுளம்பு பெருக்கம் தொடர்ந்தும் அதிகரித்து வருகின்றது. இது தொடர்பாக ஆய்வு நடாத்துமாறு சுகாதார அமைச்சர் மைத்திரி பால சிறிசேன மருத்துவ ஆராய்ச்சி நிலையத்திற்கு கடந்த வருடம் அறிவுறுத்தல் வழங்கினார். அந்த அறிவுறு த்தலின் அடிப்படையில் நடாத்தப்பட்ட ஆய்வின் அறிக்கையே இப்போது வெளியாகியுள்ளது.
இந்த அறிக்கை அமைச்சரிடம் நேற்று முன்தினம் கையளிக்கப்பட்டது.
இந்த ஆய்வு குளங்கள், சிறு சிறு குழிகள், சேற்று நிலம், நீரோட்டமில்லாத வடிகான்கள் என்பவற்றிலும், மனித செயல்பாடுகளாலும், இயற்கையாகவும் உருவான சிறு அளவில் நீர் தேங்கும் இடங்களிலும் மேற்கொள்ளப்பட்டன.
இயல்பாகவே நீர் தேங்கி நிற்கும் இடங்களில் வளரும் செடிகள் நுளம்புகள் பெருக பெரிதும் துணைபுரியும் இடங்களாக இவ்வாய்வில் கண்டறியப்பட்டுள்ளது என்று மருத்துவ ஆராய்ச்சி நிலையத்தின் பணிப்பாளர் டொக்டர் அனில் சமரநாயக்க கூறினார்.
கம்பஹா, கண்டி, நுவரெலியா ஆகிய மாவட்டங்களிலுள்ள 766 இடங்களில் இந்த ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. இங்கு தாழை, மூங்கில் மரங்களும், ரம்ப்பை, அன்னாசி, கரணை கிழங்கு செடிகளும் மூங்கில் மரங்களின் அடிப் பாகங்களும் இவ்வாய்வுக்கு உட்படுத்தப்பட்டன. அத்தோடு, நுளம்புகள் பெருகக்கூடிய இடங்களின் பெளதீக மற்றும் இரசாயனப் பண்புகளும் ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டன. இந்த இடங்களில் டெங்கு நோயை ஏற்படுத்தாத ஈடிஸ் அல்போபிக்டஸ் வகையைச் சேர்ந்த மலயா எஸ்.பி.பி., ட்ரிப் ரொய்ட் எஸ். பி. பி., கியூலெக்ஸ் எஸ். பி. பி., ஆர்மிஜிரோஸ், எஸ்பிபி 12 போன்றனவே பெரிதும் பெருகுகின்றன.
ஆய்வுக்கு உட்படுத்திய செடிகள் மற்றும் மரங்களில் ட்ரிசீலா வகையை தவிர்ந்த ஏனைய மரங்களில் 50 வீதத்திற்கும் மேல் நுளம்பு பெருகுவது உறுதியாகியுள்ளது. அதேநேரம் டெங்கு நோயைப் பரப்பும் ஈடிஸ் அல்போபிக்டஸ் இன நுளம்புகளில் 48 வீதமானவை அன்னாசி செடிகளில் பெருகுகின்றன. அத்தோடு ப்ரொம்லியா வகைகளில் 47.2 வீதமும், மரங்களின் அடிப்பாகங்களில் 42.2 வீதமும் நுளம்பு பெருகுகின்றன. மேலும் தறிக்கப்பட்ட மூங்கில் மரத்தூள்கள் மூலம் 32.6 வீதமும், கரணை கிழங்கு செடியில் 27.4 வீதமும், ரம்ப்பை, தாழையைச் சேர்ந்த பென்டனஸ் செடிகளில் 10.8 வீதமும், ரம்ப்பை செடியில் 1.8 வீதமும் டெங்கு நுளம்பு பெருகுவது கண்டறியப்பட்டுள்ளது. ஏனைய நுளம்பு வகைகள் ரம்ப்பை, தாழை மரங்களில் பெரிதும் பெருகுவதும் கண்டறியப்பட்டுள்ளது.



(மூலம்: http://www.thinakaran.lk/2013/07/17/default.asp?fn=n1307172 )

No comments:

Post a Comment

உங்கள் கருத்துக்கள் வரவேற்கப்படுகின்றன.

ADD TEXT HERE