ஸ்மார்ட் போன்கள் வெடிப்பது, தீப்பற்றி எரிவது தொடர்பில் அண்மைக்காலமாக செய்திகள் வெளியாகி வருகின்றன.
குறிப்பாக அப்பிளின் ஐபோன், செம்சுங்கின் கெலக்ஸி நோட், எஸ் 3 போன்ற ஸ்மார்ட் போன்கள் வெடித்து தீப்பற்றி எரிந்த சம்பவங்கள் தொடர்பில் அதிகமாக பேசப்படுகின்றன.

இந்நிலையில் சுவிஸ்லாந்து நாட்டைச் சேர்ந்த யுவதியொருவரின் காற்சட்டைப் பையிலிருந்த செம்சுங் கெலக்ஸி எஸ்3 ஸ்மார்ட் போன் வெடித்து தீப்பற்றி எரிந்துள்ளமை தொடர்பான தகவல் வெளியாகியுள்ளது.

பெனி ஸ்கிலெட்டர் என்ற 18 வயதான யுவதியின் எஸ்3 ஸ்மார்ட் போனே இவ்வாறு வெடித்து தீப்பற்றி எரிந்துள்ளது.
இதனால் குறித்த பெண்ணின் வலது தொடைப் பகுதியில் தீக்காயம் ஏற்பட்டுள்ளதுடன், அப்பகுதியில் அவருக்கு உணர்வேதும் இல்லையெனவும் தெரிவிக்கப்படுகின்றது.

இதனையையடுத்து செம்சுங் நிறுவனம் மீது வழக்கு பதிவுசெய்யவுள்ளதாக அப்பெண் தெரிவித்துள்ளார்.

இச்சம்பவம் தொடர்பில் வெடித்த எஸ்3 ஸ்மார்ட் போனை ஆய்வுக்குட்படுத்தி நடவடிக்கைகள் மேற்கொள்வதாக செம்சுங் தெரிவித்துள்ளது.(மூலம்: http://www.virakesari.lk/article/technology.php?vid=222 )
No comments:
Post a Comment
உங்கள் கருத்துக்கள் வரவேற்கப்படுகின்றன.