சிரியாவின் கரையோர நகரான லடகியாவில் இடம் பெற்ற பாரிய புகைமூட்டம் இஸ்ரேல் வான் தாக்குதலால் ஏற்பட்டது என நம்பப்படுகிறது. ரஷ்யாவில் தயாரிக்கப்பட்ட யகொன்ட் ஏவுகணைகளை இலக்குவைத்தே இஸ்ரேல் இந்த வான் தாக்குதலை நடத்தியுள்ளது. இந்த ஏவுகணைகள் கிழக்கு மத்திய தரை கடற் பகுதியில் இருக்கும் இஸ்ரேல் கடற்படை யினருக்கு பாரிய அச்சுறுத்தலாக உள்ளது என இஸ்ரேல் நம்புகிறது.
எனினும் இந்த செய்தி குறித்து இஸ்ரேல் எந்த கருத்தும் வெளியிடவில்லை. எனினும் இந்த தாக்குதல் குறித்து ஜனாதிபதி பஷர் அல் அஸாத் அரசு தகவல் அளித்திருந்ததாக சிரியா தொடர்பில் கண்காணிப்பில் ஈடுபடும் மனித உரிமை அமைப்பு குறிப்பிட்டுள்ளது. இந்த தாக்குதல் ஆயுத கிடங்கு மீது நடத்தப்பட்டதாக சிரிய அரசு கூறியிருந்தது. இந்த தாக்குதலில் ஒரு சிலர் கொல்லப் பட்டிருப்பதாகவும் கூறப்படுகிறது.
சிரியாவில் உள்நாட்டு யுத்தம் ஆரம்பமானது தொடக்கம் அந்நாட்டின் மீது இஸ்ரேல் பல வான் தாக்குதல்களை நடத்தியுள்ளது.(மூலம்: http://www.thinakaran.lk/2013/07/15/?fn=w1307151 )
No comments:
Post a Comment
உங்கள் கருத்துக்கள் வரவேற்கப்படுகின்றன.