உளவு பார்த்தது, ஆர்ப்பாட்டக்காரர்களை கொன்றது, இராணுவ முகாம் மீது தாக்குதல் நடத்தியது மற்றும் நாட்டின் பொருளாதாரத்திற்கு பாதிப்பை ஏற்படுத்தியது குறித்து விசாரணை ஆரம்பிக்கப்பட்டிருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. எனினும் இந்த குற்றச்சாட்டுகளை யார் பதிவு செய்தார்கள் என்பது குறித்த எந்த விவரமும் வெளியிடப்படவில்லை.
கடந்த ஜூலை 3 ஆம் திகதி இராணுவ சதிப்புரட்சியால் பதவி கவிழ்க்கப்பட்ட ஜனநாயக முறையில் தேர்வான எகிப்தின் முதலாவது ஜனாதிபதி மொஹமட் முர்சி ரகசியமான இடத்தில் இராணுவத்தால் தடுத்து வைக்கப்பட்டுள்ளார். அவரை விடுவிக்குமாறு அமெரிக்கா கோரிக்கை விடுத்துள்ளது.
அடுத்த ஆண்டு ஆரம்பத்தில் பொதுத் தேர்தல் நடத்தப்படும் என இடைக்கால ஜனாதிபதி அட்லி மன்சூர் வாக்குறுதி அளித்துள்ளார்.
கடந்த ஒருசில வாரங்களில் இடம்பெற்ற முர்சி ஆதரவு, எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்களில் ஏற்பட்ட வன்முறைகளில் பலர் கொல்லப் பட்டுள்ளனர்.
இந்நிலையில் முர்சி மற்றும் முஸ்லிம் சகோதரத்துவ அமைப்பு ஆதரவாளர்கள் மீதான குற்றச்சாட்டு பதிவு செய்யப்பட்டி ருப்பதாக அரச வழக்கறிஞர் அலுவலகம் குறிப்பிட்டுள்ளது. இவ்வாறு குற்றச்சாட்டு பதிவு செய்யப்பட்டோரில் முஸ்லிம் சகோதரத்துவ அமைப்பின் உயர்மட்ட தலைவர் மொஹமட் பஅதி மற்றும் அதன் அரசியல் பிரிவான சுதந்திரத்திற்கும் நீதிக்குமான கட்சியின் துணை இயக்குனர் எஸ்ஸாம் அல் எரியான் உட்பட சிரேஷ்ட உறுப்பினர்கள் உள்ளடங்கு கின்றனர்.
ஏற்கனவே உயர் மட்ட தலைவர் பஅதி மீது பிடியாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது. 50 க்கும் மேற்பட்ட முர்சி ஆதரவாளர்கள் கொல்லப்பட்ட இராணுவத்தின் துப்பாக்கிச்சூட்டு சம்பவம் தொடர்பிலேயே அவருக்கு பிடியாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது.
எனினும் முர்சி ஆதரவாளர்கள் கெய்ரோ பள்ளிவாசலுக்கு முன்னால் தொடர்ந்து முகாமிட்டுள்ளனர். முர்சியின் அதிகாரங்கள் மீண்டும் வழங்கப்படும் வரை அந்த இடத்தை விட்டு நகரப்போவதில்லை என அவர்கள் வலியுறுத்தி வருகின்றனர். கடந்த வெள்ளி, சனிக்கிழமைகளிலும் முர்சி ஆதரவாளர்கள் பாரிய ஆர்ப்பாட்டங்களை நடத்தினர்.(மூலம்: http://www.thinakaran.lk/2013/07/15/?fn=w1307152 )
No comments:
Post a Comment
உங்கள் கருத்துக்கள் வரவேற்கப்படுகின்றன.