......................................................................................................முழு நாலும், முழு நாளும்

பின்னூட்டங்களை வரவேற்கின்றோம்....

உங்கள் பின்னூட்டங்களை வரவேற்கின்றோம்.... ninthavurinfo@gmail.com
தினச் செய்திகள்

Monday, 15 July 2013

சோமாலியக் கப்பலில் இருந்த ஆறு இலங்கையரும் உயிருடன்

லக்ஷ்மி பரசுராமன்
மலேசியாவிலுள்ள இலங்கை தூதரகத்துக்கு ஐ.நா. தகவல்
சோமாலிய கடற்கொள்ளையர்களால் கடத்தப்பட்டிருந்த நிலையில் மூழ்கியுள்ள மலேசியக் கப்பலில் இருந்த ஆறு இலங்கையர்களும் பாதுகாப்பான முறையில் உயிர் தப்பியிருப்பதாக ஐரோப்பிய ஒன்றியத்தின் கென்னிய கடற்படை மற்றும் சோமாலியாவிலுள்ள ஐ.நா. அதிகாரிகள் மலேசியாவிலுள்ள இலங்கை தூதரகத்துக்கு தகவல் வழங்கியிருப்பதாக தெரிய வருகிறது.

இருப்பினும் உயிர் தப்பியுள்ள அறுவர் தொடர்பிலான எவ்வித விவரங்களும் கிடைக்காத நிலையில் இவர்கள் தொடர்ந்தும் கடற் கொள்ளையர்கள் வசமிருக்கலாமெனவும் ஐரோப்பிய ஒன்றியம் மற்றும் ஐ.நா. அதிகாரிகள் சந்தேகம் தெரிவித்துள்ளனர்.
மூழ்கிய கப்பலிலிருந்து நால்வர் மாத்திரமே உயிர் தப்பியிருப்பதாகவும் இருவர் காணாமல் போயிருப்பதாகவும் ஆரம்பத்தில் தகவல்கள் வெளியாகியிருந்த நிலையிலேயே தற்போது அறுவரும் உயிர் பிழைத்திருப்பதாக ஐரோப்பிய ஒன்றியம் மற்றும் ஐ.நா. அதிகாரிகள் அறிவித்துள்ளனர்.
இது தொடர்பில் இலங்கை வெளிவிவகார அமைச்சை தொடர்பு கொண்டு கேட்டபோது கிடைக்கப்பெற்றுள்ள தகவல் குறித்து ஆராய்ந்து கூறுவதாக தெரிவித்தனர்.
சோமாலிய கடற் கொள்ளையர்களால் கடந்த மூன்று வருடங்களாக சோமாலிய கரையோரத்தில் தடுத்து வைக்கப்பட்டிருந்த மலேசிய கப்பல் கடலில் மூழ்கியது. சம்பவத்தின் போது கப்பலில் 15 பேர் இருந்ததாகவும் அதில் அறுவர் இலங்கையர்களெனவும் வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
எம்.வி. அல்படோ என்னும் மலேசியக் கப்பல் கென்யாவின் மோம்பஸா துறைமுகத்திலிருந்து டுபாயின் துறைமுகத்துக்குப் பயணித்துக் கொண்டிருந்தபோதே சோமாலிய கடற்கொள்ளையர்களால் கடத்தப்பட்டது.
கப்பலிலிருந்த இலங்கையர்கள் தொடர்பில் மலேசியா மற்றும் கென்யாவிலுள்ள இலங்கைத் தூதரகங்கள் தொடர்ந்தும் தகவல்களை திரட்டி வருகின்றன.


(மூலம்: http://www.thinakaran.lk/2013/07/15/?fn=n1307158 )

No comments:

Post a Comment

உங்கள் கருத்துக்கள் வரவேற்கப்படுகின்றன.

ADD TEXT HERE