......................................................................................................முழு நாலும், முழு நாளும்

பின்னூட்டங்களை வரவேற்கின்றோம்....

உங்கள் பின்னூட்டங்களை வரவேற்கின்றோம்.... ninthavurinfo@gmail.com
தினச் செய்திகள்

Tuesday, 25 June 2013

ஒரு வருட பூர்த்தியில் ikman.lk விளம்பர இணையத்தளம்

இலகுவான முறையில் முற்றிலும் இலவசமாக சிறு விளம்பரங்களை இணையத்தின் ஊடாக பிரசுரித்துக் கொள்ளக்கூடிய வசதியை வழங்கும் ikman.lk இணையத்தளம் இலங்கையில் ஆரம்பிக்கப்பட்டு ஒரு வருடம்பூர்த்தியாகிறது.

இந்த இணையத்தளத்தினூடாக கையடக்க தொலைபேசிகள், வாகனங்கள், காணிகள் போன்ற பல அம்சங்கள் இலங்கையின் அனைத்து பிரதான நகரங்களிலிருந்தும் கொள்வனவு செய்துகொள்ளவதற்காக விளம்பரம் செய்து கொள்ளும் வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது.
ikman.lk இணையத்தளத்தின் சிறப்பான செயற்பாடு குறித்து சந்தைப்படுத்தல் முகாமையாளர் கௌஷலி ஜயசூரிய கருத்து தெரிவிக்கையில், ikman.lk இணையத்தளமானது, இலங்கைச்சந்தையில் உள்ள விற்பனையாளர்கள் மற்றும் கொள்வனவாளர்களுக்கு இலகுவான முறையில் தொடர்பாடல்களை பேணும் நோக்கத்துடன் ஆரம்பிக்கப்பட்டிருந்தது. இந்த இணையத்தளம் இலகுவாக பயன்படுத்தக்கூடியது.
முற்றிலும் இலவசமானது. இதில் நீங்கள் பல பொருட்களை கொள்வனவு செய்து கொள்வதற்கானவிபரங்களை பெற்றுக் கொள்ளலாம். கடந்த ஆண்டு ஜுன் மாதம் இந்த இணையத்தளத்தை நாம் ஆரம்பித்ததை தொடர்ந்து, இது வரையில் எமது இணையத்தளத்துக்கு விஜயம் செய்யும் பார்வையாளர்களின் எண்ணிக்கை மாதமொன்றுக்கு 25,000 எனும் எண்ணிக்கையிலிருந்து 1.2 மில்லியன் எனும் எண்ணிக்கை வரை அதிகரித்துள்ளது.
இதன் காரணமாக இலங்கையின் மிகப்பெரிய சிறுவிளம்பர இணையத்தளமாக எமது பக்கம் அமைந்துள்ளது. மேலும், எமது தளத்தில் பிரசுரிக்கப்படும் விளம்பரங்களின் எண்ணிக்கை மாதமொன்றில் 4,700 இலிருந்து 121,000 ஆக அதிகரித்துள்ளது.
ikman.lk எனும் இணையத்தள தகவல் கம்பனியின் தரவுகளுக்கு அமைய, ikman.lk இணையத்தளமானது, இலங்கையின் மிகப்பெரும் இணையத்தளமாக தரப்படுத்தப்பட்டுள்ளது.
நாட்டிலுள்ள அனைவரும் அணுகக்கூடிய வகையில் அமைந்துள்ள இந்த தளம், கொள்வனவாளருக்கும் தாம் எதிர்பார்க்கும் பொருளை பார்வையிடக்கூடிய வசதியை ஏற்படுத்தியுள்ளது. பாவனையாளர்கள் தாம் வசிக்கும் நகரங்களில் காணப்படும் பொருட்களை தெரிவு செய்யலாம். இதன ; மூலம் நீண்ட தூர
பயணங்களை தவிர்த்துக் கொள்ள முடிவதுடன், போலியான நடவடிக்கைகளிலிருந்து தம்மை பாதுகாத்துக் கொள்ளவும் முடியும்.
மைஅயn.டம இணையத்தளத்தின் செயற்பாடுகள் குறித்து தலைமை அதிகாரி அலெக்சாண்டர் லோபெக் கருத்து தெரிவிக்கையில், “ikman.lk இணையத்தளத்தின் மூலம் பாவனையாளர்கள் எந்தளவு விளம்பரங்களையும் இணையத்தில் தரவேற்றிக் கொள்ள முடியும். இவ்வாறு தரவேற்றம் செய்யப்படும் விளம்பரங்கள் சுமார் 4 மணி நேர காலப்பகுதியினுள் எமது தளத்தில் பிரசுரிக்கப்படும்.
வாடிக்கையாளர்களின் மூலம் பிரசுரிக்கப்படும் விளம்பரங்கள் முறையான அனுமதி திட்டத்தினூடாக பிரசுரிக்கப்படுகிறது. இதன் மூலம் விளம்பரங்கள் முறையான விதிமுறைகளையும் கடப்பாடுகளையும் பின்பற்றியனவாக அமைந்துள்ளமை உறுதி செய்யப்படுகின்றன. விளம்பரங்களை இலகுவாக தெரிவு செய்து கொள்ளக்கூடிய வகையில் அவற்றை நாம் பட்டியல்படுத்தியுள்ளோம்.
உதாரணமாக எலெக்ட்ரோனிக்ஸ் பிரிவில் 139,000 விளம்பரங்கள், கார்கள் மற்றும் வாகனங்கள் பிரிவில் 69,000விளம்பரங்கள், சொத்துக்கள் பிரிவில் 38,000 விளம்பரங்கள் மற்றும் வேலை வாய்ப்புகள் பிரிவில் 17,700 விளம்பரங்கள் என பல அமைந்துள்ளன. இதன் மூலம் பார்வையாளரின் தேவையை இலகுவாக பூர்த்தி செய்து கொள்ளக்கூடிய வகையில் மைஅயn.டம இணையத்தளம் அமைந்துள்ளது” என்றார்.
“மைஅயn.டம இணையத்தளத்தினூடாக மாறுபட்ட, விறுவிறுப்பான மற்றும் பாரம்பரிய விளம்பர முறைக்கு அப்பாற்பட்ட விடயமொன்றை நாம் அறிமுகம் செய்துள்ளோம். இலங்கையில் சந்தை வாய்ப்பு துரித கதியில் அதிகரித்துச் செல்வதுடன், இணைய பாவனையாளர்களும் அதிகரித்த வண்ணமுள்ளனர்.
ஆய்வாளர்களின் கருத்துப்படி இலங்கையில் இணைய பாவனையாளர்கள் 3 மில்லியனுக்கும் அதிகமானோர் காணப்படுகின்றனர் என்பது கண்டறியப்பட்டுள்ளது. இந்த அபிவிருத்தியுடன் ikman.lk இணையத்தளமும் வளர்ச்சியடையும் எனும் நம்பிக்கையை நாம் கொண்டுள்ளோம். வெவ்வேறு விதமான சேவைகளை இலங்கையர்களுக்கு நாம் எமது இணையத்தளத்தினூடாக வழங்க தயாராகவுள்ளோம்” என லோபெக் மேலும் குறிப்பிட்டிருந்தார்.
ikman.lk சந்தைப்படுத்தல் முகாமையாளர், கௌஷலி ஜயசூரிய தொடர்ந்து குறிப்பிடுகையில்,
“தனது முதலாவது வருட நிறைவை கொண்டாடும் வகையில் மைஅயn.டம இணையத்தளமானது போட்டி ஒன்றை ஏற்பாடு செய்து பல பெறுமதியான அன்பளிப்புகளை தனது வாடிக்கையாளர்களுக்கு வழங்க தயாராகவுள்ளது.
இதில் இருவருக்கு மலோசியாவுக்கு சென்று வருவதற்கான சுற்றுலா பயண ஏற்பாடு உள்ளடங்குகிறது. இதில் பயண விமான பற்றுச்சீட்டுகள், 2 இரவுகள் - 3 பகல் பொழுதை களிப்பதற்கான ஹோட்டல் தங்குமிட வசதி, மலேசியாவில் விமான நிலைய மாற்றீட்டு வசதிகள் போன்றன உள்ளடங்குகின்றன.
கடந்த ஓராண்டு காலமாக எம்முடன் இணைந்திருக்கும் வாடிக்கையாளர்களுக்கு எமது நன்றிகளை தெரிவிக்கும் ஒரு நடவடிக்கையாக இது அமைந்துள்ளது” என்றார்.
இந்த போட்டியில் பங்குபற்றுவதற்கு, மைஅயn.டம இணையத்தளத்தில் விளம்பரம் ஒன்றை பிரசுரித்து, facebook fan page பக்கத்தில் லைக் செய்து, அந்த facebook இணையப்பக்கத்தில் குறித்த விளம்பரத்தின் link முகவரியை பிரசுரிப்பதாகும். அதிகளவு விளம்பரங்களை இவ்வாறு பதிவு செய்யும் வாடிக்கையாளர்களுக்கு வெற்றி வாய்ப்புகள் அதிகரிக்கும்.
ஆயினும், போலியான அல்லது ஒரே விளம்பரத்தை மீண்டும் மீண்டும் பிரசுரிப்பது தகுதியற்றதாக கொள்ளப்படும். இந்த போட்டி ஜுன் மாதம் 24 ஆம் திகதி முதல் ஆரம்பித்து ஜுலை மாதம் 24ஆம் திகதி வரை இடம்பெறவுள்ளது. 

வெற்றியாளர்கள் ikman.lk பக்கத்தினூடாக அறிவிக்கப்படுவர்.

(மூலம்:http://www.virakesari.lk/article/business.php?vid=201 )

No comments:

Post a Comment

உங்கள் கருத்துக்கள் வரவேற்கப்படுகின்றன.

ADD TEXT HERE