......................................................................................................முழு நாலும், முழு நாளும்

பின்னூட்டங்களை வரவேற்கின்றோம்....

உங்கள் பின்னூட்டங்களை வரவேற்கின்றோம்.... ninthavurinfo@gmail.com
தினச் செய்திகள்

Thursday, 27 June 2013

பிரிட்டனில் மற்றொரு பள்ளிவாசல் மீது தாக்குதல்

பிரிட்டனின் வொர்விக்ஷெயரிலுள்ள பள்ளிவாசலொன்று இனந்தெரியாதோரால் உடைக்கப்பட்டு இஸ்லாமிய எதிர்ப்பு வாசகங்களும் கிறுக்கப்பட்டுள்ளன.

கட்டுமானப்பணிகள் மேற்கொள்ளப் பட்டுவந்த பள்ளி வாசலே நேற்று தாக்குதலுக்கு உள்ளாகியுள்ளது. பள்ளிவாசலின் ஆறு ஜன்னல்கள் உடைக்கப்பட்டு சுவர்களில் கிறுக்கப்பட்டுள்ளது. இது ஹிட்லரின் நாசிச அடையாளமான ஸ்வஸ்திகா அடையாளமும் கிறுக்கப்பட்டுள்ளது.
இச்சம்பவத்தைத் தொடர்ந்து பள்ளிவாசலையொட்டி பொலிஸாரின் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. இவ்வாறான தாக்குதல்கள் தேசிய அளவில் இடம்பெறுவதால் ஏற்கனவே பள்ளிவாசலை ஒட்டி ரோந்து நடவடிக்கைகள் செயற்படுத்தப்பட்டிருந்ததாக கூறிய வெஸ்ட்மார் ஷியா பொலிஸ் நிலைய அதிகாரி கெவின் பர்சல், இச்சம்பவத்தின் பின்னர் பாதுகாப்பு மேலும் பலப்படுத்தப் பட்டிருப்பதாக குறிப்பிட்டார்.


(மூலம்: http://www.thinakaran.lk/2013/06/27/?fn=w1306275 )

No comments:

Post a Comment

உங்கள் கருத்துக்கள் வரவேற்கப்படுகின்றன.

ADD TEXT HERE