ஜியர் அல் வாதி பகுதியில் 8 பேரளவில் இந்த தாக்குதலில் ஈடுபட்டுள்ளனர் என சம்பவத்தை நேரில் கண்ட ஒருவர் ஏ. எப். பி. செய்திச் சேவைக்கு விபரித்துள்ளார். குறித்த சிரிய நாட்டவர்கள் இசைப்பதிவு ஒன்றுக்காக இசை அரங்குக்கு சென்று கொண்டிருந்தவர்கள் என லெபனானின் தேசிய செய்தி நிறுவனம் கூறியது.
சிரியாவில் தொடரும் மோதலை ஒட்டி லெபனானிலும் பதற்றம் நீடிக்கும் நிலையிலேயே இந்தத் தாக்குதல் இடம்பெற்றுள்ளது. லெபனானின் ஷியா முஸ்லிம்கள் சிரியாவின் ஜனாதிபதி பஷர் அல் அஸாத் அரசுக்கு ஆதரவாக செயற்படுவதோடு, சுன்னி முஸ்லிம்கள் கிளர்ச்சியாளர்களுக்கு ஆதரவாக செயற்பட்டு வருகின்றனர்.(மூலம்: http://www.thinakaran.lk/2013/06/27/?fn=w1306277 )
No comments:
Post a Comment
உங்கள் கருத்துக்கள் வரவேற்கப்படுகின்றன.