......................................................................................................முழு நாலும், முழு நாளும்

பின்னூட்டங்களை வரவேற்கின்றோம்....

உங்கள் பின்னூட்டங்களை வரவேற்கின்றோம்.... ninthavurinfo@gmail.com
தினச் செய்திகள்

Thursday, 27 June 2013

லண்டன் பள்ளிவாசல்களை பாதுகாக்க யூதர்கள் உதவி

யூத விசேட பொலிஸ் ரோந்து
லண்டனிலுள்ள ஹக்னி பகுதியில் இருக்கும் பள்ளிவாசல்கள் மற்றும் முஸ்லிம் கட்டிடங்களை பாதுகாக்க யூதர்களின் ரோந்துக் குழு முன்வந்துள்ளது.
பிரிட்டனில் முஸ்லிம்களுக்கு எதிரான தாக்குதல்கள் அதிகரித்துவரும் நிலையிலேயே அங்குள்ள யூத சமூகத்தினர் இந்த நடவடிக்கைக்கு முன்வந்துள்ளனர்.
ஹக்னி பகுதியில் யூத எதிர்ப்பு குற்றச் செயல்கள் அல்லது பொதுமக்களுக்கு அச்சுறுத்தலான செயல்களை தடுக்க தன்னார்வத் தொண்டர்களைக் கொண்ட பயிற்றுவிக்கப்பட்ட யூதர்களின் விசேட பொலிஸார் குறித்த பகுதியில் ரோந்து நடவடிக்கையில் ஈடுபட்டு வருகிறது.
இந்நிலையில் இங்குள்ள முஸ்லிம் சமூகத்தினர் யூத தலைவர்களை சந்தித்து இரு சமூகத்தினருக்கும் இடையிலான ஒத்துழைப்பை பலப்படுத்தக் கோரியுள்ளனர். இதன் போது தனது ரோந்து நடவடிக்கையில் பள்ளிவாசல்கள் மற்றும் ஏனைய கட்டிடங்களையும் உள்ளடக்க யூத ரோந்துக் குழுவினர் இணங்கியுள்ளனர்.
யூத ரோந்துக் குழுவின் மேற்பார்வையாளர் செய்ம் ஹொவ்சர் கூறும் போது:- “முஸ்லிம் சமூகத்தினர் தமது பாதுகாப்புக்கு என்ன செய்ய வேண்டும் எனக் கோரி இருந்தார்கள். எனவே அவர்களுக்கு உதவ நாம் முன் வந்தோம்” என்றார்
லண்டனில் இராணுவ வீரர் ஒருவர் கழுத்துவெட்டி கொல்லப்பட்ட சம்பவத்தை தொடர்ந்து தீவிரமடைந்த இஸ்லாமிய எதிர்பபு நடவடிக்கைகளால் ஹக்னி பகுதி கடுமையாகப் பாதிக்கப்பட்டது. இங்குள்ள சோமாலிய சமூகத்தினரின் பள்ளிவாசல் ஒன்று தீக்கிரையாக்கப்பட்டதோடு மற்றொரு பள்ளிவாசல் மீது தாக்குதல் நடத்தப்பட்டது.

(மூலம்: http://www.thinakaran.lk/2013/06/27/?fn=w13062710 )

No comments:

Post a Comment

உங்கள் கருத்துக்கள் வரவேற்கப்படுகின்றன.

ADD TEXT HERE