......................................................................................................முழு நாலும், முழு நாளும்

பின்னூட்டங்களை வரவேற்கின்றோம்....

உங்கள் பின்னூட்டங்களை வரவேற்கின்றோம்.... ninthavurinfo@gmail.com
தினச் செய்திகள்

Thursday, 27 June 2013

இஸ்லாமிய வலையமைப்பை தேடி ஜெர்மனி, பெல்ஜியத்தில் தீவிர சோதனை

சந்தேகத்திற்கு இடமான இஸ்லாமிய வாதிகளின் வலையமைப்புக்கு எதிராக ஜெர்மனி மற்றும் பெல்ஜியத்தில் அந்நாடுகளின் பொலிஸார் தீவிர சுற்றிவளைப்பு தேடுதல் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர்.

தீவிரவாதிகளுக்கு நிதி சேகரிக்கும் செயற்பாடு மற்றும் தன்னியக்க கருவி மூலம் இயக்கப்படும் விமான இயந்திரத்தைக் கொண்டு தாக்குதல் நடத்தத் திட்டமிட்டதாக சந்தேகிக்கப்படும் நபர்களை தேடியும் இந்த சோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
மறுபுறத்தில் பிரான்ஸ் பொலிஸார் கடந்த திங்கள், செவ்வாய்க் கிழமைகளில் மேற்கொண்ட தேடுதல் நடவடிக்கையில் ஜிஹாத் வலையமைப்புடன் தொடர்புபட்ட 9 இஸ்லாமியவாதிகள் கைது செய்யப்பட்டதாக கூறப்பட்டுள்ளது.
இந்நிலையில் தெற்கு ஜெர்மனி மற்றும் கிழக்கு ஜெர்மனியின் சக்கோனி பகுதிகளில் அடுக்குமாடிக் கட்டடங்கள் மற்றும் சந்தேகத்திற்கு இடமான பகுதிகளில் செவ்வாய்க்கிழமை காலை பொலிஸார் தீவிர சோதனை மேற்கொண்டுள்ளனர். அதேபோன்று பெல்ஜியத்தின் ஒருசில பகுதிகளிலும் சோதனை மேற்கொள்ளப் பட்டுள்ளது. எனினும் இந்த சோதனைகளில் எவரும் கைது செய்யப்படவில்லை என அறிவிக்கப்பட்டுள்ளது.
இதில் தன்னியக்க கருவி மூலம் விமான இயந்திரத்தை பயன்படுத்தி தாக்குதல் நடத்த திட்டமிட்டிருப்பதற்கான ஆவணங்கள் கைப்பற்றப்பட்டிருப்பதாக ஜெர்மனி பொலிஸார் குறிப்பிடுகின்றனர். இந்த தாக்குதல் சதியுடன் தொடர்புடைய துனீஷிய நாட்டு பூர்விகத்தைக் கொண்ட இரு சந்தேக நபர்களை பொலிஸார் தேடி வருகின்றனர்.


(மூலம்: http://www.thinakaran.lk/2013/06/27/?fn=w1306279 )

No comments:

Post a Comment

உங்கள் கருத்துக்கள் வரவேற்கப்படுகின்றன.

ADD TEXT HERE