கிளைஸ் 667 சி நட்சத்திரத்தை மூன்று கிரகங்கள் வலம் வருவதை வானியலாளர்கள் முன்னர் கண்டுபிடித்திருந்தனர். ஆனால் இந்த நட்சத்திரத்தை குறைந்தது ஆறு கிரகங்கள் சுற்றிவருவது தற்போது உறுதியாகியுள்ளது.
இதிலே மூன்று கிரகங்கள் நீர் இருப்பதற்கான இடைவெளியைக் கொண்ட சுற்று வட்டப்பாதையில் தனது நட்சத்திரங்கள் வலம்வருவது கண்டறியப்பட்டுள்ளது. எனவே இங்கு உயிர்வாழ்வதற்கு சாத்தியமான சூழல் நிலவுவதாக வானியலாளர்கள் நம்புகின்றனர். திரவ நீர் கொண்ட வாழ்விட மண்டலத்தில் இருப்பதாக நம்பப்படும் இந்த மூன்று கிரகங்களும் நமது பூமியை விடவும் பெரிதானது என்றபோதும் நெப்டியூனை விடவும் சிறிது என வானியலாளர்கள் குறிப்பிட்டுள்ளனர்.
“ஒரே நட்சத்திர தொகுதியில் மூன்று கிரகங்கள் உயிர்வாழ சாத்தியமான மண்டலத்தில் வலம்வரும்வது கண்டறியப்பட்டது இதுவே முதல் முறையாகும்” என கார்னஜி பல்கலைக்கழகத்தின் வானியலாளர் போல் பட்லர் குறிப்பிட்டுள்ளார். எனினும் இந்த கிரகங்கள் நமது பூமியில் உள்ள பாறையை போன்று நிலப்பரப்புடன் காணப்படுவதாக கூறப்படுகிறது. மேற்படி கிரகங்களை வலம்வரும் கிளைஸ் 667 சி நட்சத்திரம் 22 ஒளியாண்டு (129 டிரில்லியன் மைல்கள்) தூரத்திலேயே உள்ளது.(மூலம்: http://www.thinakaran.lk/2013/06/27/?fn=w1306278 )
No comments:
Post a Comment
உங்கள் கருத்துக்கள் வரவேற்கப்படுகின்றன.