பதற்றம் நிறைந்த ஷின்ஜியாங் பிராந்தியத்தில் உய்குர் இன முஸ்லிம்கள் மற்றும் ஹென் சீன சமூகத்தினருக்கு இடையில் அடிக்கடி கலவரம் வெடிக்கின்றமை குறிப்பிடத்தக்கது. எனினும் இங்கிருந்து தகவல்களை பெறுவதில் கடும் கட்டுப்பாடு நிலவுவதால் எந்த செய்தியையும் சுயாதீனமாக உறுதி செய்ய முடியவில்லை என சர்வதேச ஊடகங்கள் கூறியுள்ளன.
ஷின்ஜியாங் பிராந்தியத்தின் தலைநகரான உருமகியிலிருந்து 200 கிலோ மீற்றருக்கு அப்பாலிக்கும் லகுன் நகரிலேயே கலவரம் வெடித்துள்ளது. சின்ஹொ செய்தி சேவை உள்ளூர் அதிகாரியை மேற்கோள் காட்டி வெளியிட்ட செய்தியின்படி, பொலிஸார் கலவர இடத்திற்கு வரும் முன் இடம்பெற்ற வன்முறையில் 9 பாதுகாப்பு உத்தியோகத்தர்கள் 8 பொது மக்கள் கொல்லப்பட்டனர்.
சம்பவ இடத்திற்கு வந்த பொலிஸார் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 10 கலகக்காரர்கள் கொல்லப்பட்டுள்ளனர். எனினும் கலவரத்தில் ஈடுபட்டோரது இன அடையாளம் தொடர்பில் எந்தத் தகவலும் வெளியிடப்படவில்லை. கடந்த 2009 ஆம் ஆண்டு ஷின்ஜியாங்கில் இடம்பெற்ற உய்குர் மற்றும் ஹென் சீனர்களுக்கு இடையில் இடம்பெற்ற கலவரத்தில் சுமார் 200 பேர் கொல்லப்பட்டனர்.
உய்குர்கள்
* உய்குர்கள் துர்கிக் முஸ்லிம் சமூகத்தவராவர்
* ஷின்ஜியாங் பிராந்தியத்தில் இவர்கள் சுமார் 45 வீதத்தினர் வாழ்கின்றனர். இங்கு ஹென் சீனர்கள் 40 வீதத்தினர் உள்ளனர்.
* சிறிது காலம் கிழக்கு துர்கிஸ்தான் என தனி நாடாக இருந்த இந்தப் பிராந்தியத்தை சீனா 1949 ஆம் ஆண்டு தனது நிலப்பரப்புக்குள் உள்வாங்கியது.
* சீனாவுக்குள் உள்வாங்கப்பட்ட பின் இங்கு பாரிய அளவான ஹென் சீனர்களின் குடியேற்றங்கள் இடம்பெற்றுள்ளன.
* தமது தனித்துவ கலாசார அடையாளங்கள் அழிக்கப்பட்டு விடும் என உய்குர் முஸ்லிம்கள் அஞ்சுகின்றனர்.(மூலம்: http://www.thinakaran.lk/2013/06/27/?fn=w1306274 )
No comments:
Post a Comment
உங்கள் கருத்துக்கள் வரவேற்கப்படுகின்றன.