எனினும் ஸ்னோடனை அமெரிக்காவுக்கு நாடுகடத்த ரஷ்யாவுக்கு தற்போது சட்ட ரீதியான அனுமதி இருப்பதாக வெள்ளை மாளிகை பேச்சாளர் ஒருவர் கூறினார். மறுபுறத்தில் ஸ்னோடனுக்கு புகலிடம் வழங்குவது குறித்து ஆலோசிக்கப்பட்டு வருவதாக வெனிசுவெலா கூறியுள்ளது. ‘உலகை காப்பதற்கு வெளியிடப் பட்ட தகவலுக்காக இந்த இளைஞனை பாதுகாக்க முன்வர வேண்டும்’ என வெனிசுவெலா ஜனாதிபதி நிகொலஸ் மடுரோ தெரிவித்தார்.
ஸ்னோடன் தனது குடிவரவு எல்லைக்குள் வராத நிலையில் அவர் மீது உள்நாட்டு நீதிமுறையை பிரயோகிக்க முடியாது என ரஷ்யா விபரித்துள்ளது. எனினும் ஸ்னோடனுக்கு உதவுவதாக ரஷ்யா மீது அமெரிக்கா சுமத்திய குற்றச்சாட்டை அது முழுமையாக நிராகரித்தது. சீனாவும் இவ்வாறான குற்றச்சாட்டை நிராகரித்திருந்தது
அமெரிக்கா இணையத்தளம் மற்றும் தொலைபேசிகளை கண்காணித்து வருவதாக உளவு ரகசியத்தை அம்பலப்படுத்திய முன்னாள் சி. ஐ. ஏ. பணியாளர் ஸ்னோடன் தனது இருப்பிடமான ஹவாயிலிருந்து ஹொங்கொங் தப்பிச் சென்றார். அவர் அங்கிருந்து கடந்த ஞாயிற்றுக்கிழமை மொஸ்கோவை சென்றடைந்தார். அவர் கடந்த திங்கட்கிழமை கியூபா சென்று அங்கிருந்து வெனிசுவெலா ஊடாக ஈக்வடோரில் தஞ்சம்புகவுள்ளதாக செய்தி வெளியானது.
ஆனால் அவர் அன்றைய தினம் கியூப விமானத்தில் பயணிக்கவில்லை. ஸ்னோடனின் கடவுச்சீட்டை அமெரிக்கா செல்லுபடியற்றதாக்கியுள்ள நிலையில் அவர் ஈக்வடோரில் புகலிடக் கோரிக்கைக்கு விண்ணப்பித்துள்ளார். அவருக்கு விக்கிலீக்ஸ் இணையத்தள நிறுவனம் சட்ட ரீதியான உதவிகளை செய்து வருவதாக நம்பப்படுகிறது. ஏற்கனவே விக்கிலீக்ஸ் நிறுவனர் ஜூலியா அஸ்ஸாஞ்ச் லண்டனில் உள்ள ஈக்வடோர் தூதரகத்தில் தஞ்சம்புகுந்துள்ளார்.
இந்நிலையில் ஸ்னோடனை நாடுகடத்துமாறு அமெரிக்க இராஜாங்கச் செயலாளர் ஜோன் கெர்ரியும் வலியுறுத்தியிருந்தார். நாடுகளுக்கிடையில் இருக்கும் பொதுவான சட்டத்தை கடைப்பிடிக்குமாறு கடந்த செவ்வாய்க்கிழமை கெர்ரி ரஷ்யாவை வலியுறுத்தினார். ‘ஐக்கிய நாடுகளின் நிரந்தர உறுப்பினர்கள் என்ற வகையிலும் நட்பு நாடு என்ற வகையிலும் சட்ட ரீதியான எமது கோரிக்கைக்கு மதிப்பளியுங்கள்’ என ஜோன் கெர்ரி ரஷ்யாவிடம் கோரிக்கை விடுத்தார். எனினும் குற்றவாளிகளை நாடு கடத்தும் சர்வதேச உடன்பாட்டுக்கு அமையவே எம்மால் செயற்பட முடியும் என விளாடிமிர் புடின் குறிப்பிட்டுள்ளார்.
போக்குவரத்து வலயம்
* மொஸ்கோ ஷெர்மெட்யெவொ விமான நிலையத்தின் போக்குவரத்து வலயம் ரஷ்ய இறையாண்மைக்கு உட்பட்ட பகுதியாகும். ஆனால் ஸ்னோடன் அங்கு தங்கியிருந்த போதும் அவர் தனது நாட்டு எல்லைக்குள் வரவில்லை என்றே ரஷ்யா கூறுகிறது.
* விமான நிலையத்தில் இறங்கும் பயணி குறித்த நாட்டுக்குள் செல்ல சட்டப்படி நுழைவு விசா தேவை.
* ஸ்னோடனை நாட்டுக்குள் நுழைய ரஷ்யா அனுமதித்தால் அது அவரை தப்பிச்செல்ல உதவும் நாடாக கருத முடியும் என ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.
* ஸ்னோடன் போக்குவரத்து வலையத்தில் இருக்கும் ஹோட்டல் அறையொன்றில் தங்கியிருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது.(மூலம்: http://www.thinakaran.lk/2013/06/27/?fn=w1306272 )
No comments:
Post a Comment
உங்கள் கருத்துக்கள் வரவேற்கப்படுகின்றன.