......................................................................................................முழு நாலும், முழு நாளும்

பின்னூட்டங்களை வரவேற்கின்றோம்....

உங்கள் பின்னூட்டங்களை வரவேற்கின்றோம்.... ninthavurinfo@gmail.com
தினச் செய்திகள்

Sunday, 30 June 2013

-மொஹொமட் ஆஸிக்

நடைபெறவுள்ள வடக்கு, வட மேல் மற்றும் மத்திய ஆகிய  மாகாண சபைகளுக்கான தேர்தல்களில் தனித்து போட்டியிடும் என ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் அறிவித்துள்ளது.


இந்த அறிவிப்பினை ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவரும் நீதி அமைச்சருமான ரவூப் ஹக்கீம் கண்டியில்; இன்று ஞாயிற்றுக்கிழமை இடம்பெற்ற நிகழ்வொன்றில் மேற்கொண்டுள்ளார்.

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் அரசாங்கத்துடன் இணைந்த கட்சியாக இருந்தாலும் அதன் தனித்துவம் பாதுகாக்கப்படும் என அவர் குறிப்பிட்டார்.

இதனால் தேர்தல்களில் தனித்து போட்டியிடுவதும் வேட்பாளர்களை தெரிவு செய்வதும் கட்சியின் தனித்துவமாகும் என அவர் தெரிவித்தார்.

எனினும் சில நேரங்களில் இந்த தீர்மானத்தில் மாற்றங்கள் ஏற்பாடலாம் என அமைச்சர் ஹக்கீம் மேலும் குறிப்பிட்டார்.

(மூலம்: http://tamil.dailymirror.lk/2010-07-14-09-13-23/73013-2013-06-30-09-54-40.html )

No comments:

Post a Comment

உங்கள் கருத்துக்கள் வரவேற்கப்படுகின்றன.

ADD TEXT HERE