ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் மாகாண சபை உறுப்பினர்கள் பகிரங்க மன்னிப்புக் கோரினர் என நம்பத்தகுந்த வட்டாரங்கள் தெரிவித்தன.
வட மேல் மாகாண சபை உறுப்பினர்களான எஹியா ஆப்தீன் மற்றும் ரிஸ்வி ஜவஹர்ஷா ஆகிய இருவருமே நேற்று சனிக்கிழமை இரவு நடைபெற்ற ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் அதியுயர் பீடத்திலேயே மன்னிப்புக் கோரினர்.
13ஆவது திருத்தச் சட்டமூலத்தில் திருத்தங்களை மேற்கொள்ளவதற்கு அங்கீகாரம் வழங்குவது தொடர்பிலான பிரேரணைக்கு குறித்த இரண்டு பேரும் வட மேல் மாகாண சபையில் ஆதரவளித்தனர்.
இதனையடுத்து கட்சித் தலைவர் ரவூப் ஹக்கீமினால் இவர்கள் இருவரும் கட்சியிலிருந்து இடைநிறுத்தப்பட்டனர். இந்த நிலையிலேயே நேற்று இடம்பெற்ற கூட்டத்தில் இவர்கள் இருவரும் கலந்துகொண்டு தமது பக்க நியாங்களை தெரிவித்து மன்னிப்பு கோரினர்.
இதன்போது முதலமைச்சர் உட்பட மாகாண ஆளும் கட்சி உறுப்பினர்களினால் தாம் அச்சுறுத்தப்பட்டதாகவும் வாக்களிக்காவிட்டால் நிதியொதுக்கீடு மற்றும் நியமனங்கள் நிறுத்தப்படும் என தெரிவித்ததாகவும் கட்சியின் அதியுயர் பீட கூட்டத்தில் தெரிவித்தனர்.
(மூலம்: http://tamil.dailymirror.lk/2010-07-14-09-13-23/72977-2013-06-30-06-22-45.html )
No comments:
Post a Comment
உங்கள் கருத்துக்கள் வரவேற்கப்படுகின்றன.