......................................................................................................முழு நாலும், முழு நாளும்

பின்னூட்டங்களை வரவேற்கின்றோம்....

உங்கள் பின்னூட்டங்களை வரவேற்கின்றோம்.... ninthavurinfo@gmail.com
தினச் செய்திகள்

Monday, 24 June 2013

தெரிவுக்குழுவில் இடம்பெறாவிட்டாலும் எமது கருத்துக்கள் அங்கு ஒலிக்கும் : அமைச்சர் ராஜித்த சேனாரட்ன

பாராளுமன்றத் தெரிவுக்குழுவில் ஆளும் கட்சியின் சார்பில் அனைவருக்கும் இடம்பெற முடியாது. தெரிவுக்குழுவில் நான் இடம்பெறாவிடினும் எனது நிலைப்பாட்டையுடைய பலர் அதில் உள்ளனர். எனவே எமது கருத்துக்கள் அங்கு ஒலிக்கப்படும் என்று மீன்பிடி மற்றும் நீரியல்வள அமைச்சர் டாக்டர் ராஜித்த சேனாரட்ன தெரிவித்தார்.

13 ஆவது திருத்தச் சட்டத்தில் எவ்விதமான அதிகாரக் குறைப்பையும் செய்யக்கூடாது என்று வலியுறுத்திவரும் அமைச்சர் ராஜித்த சேனாரட்ன அரசியலமைப்பு திருத்தங்கள் குறித்து ஆராய்வதற்கு பாராளுமன்றத் தெரிவுக்குழுவில் இடம்பெறாமை தொடர்பில் விபரிக்கையிலேயே மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
அவர் இந்த விடயம் குறித்து மேலும் குறிப்பிடுகையில்
ஏதாவதொரு விடயம் குறித்து ஆராயும்போது நியமிக்கப்படும் பாராளுமன்றத் தெரிவுக்குழுவில் அரசியல் கட்சிகளின் சார்பில் ஒரு சில பிரதிநிதிகளே நியமிக்கப்படுவார்கள்.
அந்த வகையில் தற்போது அரசியலமைப்பு திருத்தம் தொடர்பில் ஆராய நியமிக்கப்பட்டுள்ள பாராளுமன்றத் தெரிவுக்குழுவில் ஆளும் கட்சியின் சார்பில் அதன் பிரதிநிதிகள் நியமிக்கப்பட்டுள்ளனர்.
எனவே அவ்வாறான தெரிவுக்குழுவில் ஆளும் கட்சியின் அனைத்து உறுப்பினர்களும் இடம்பெறவேண்டும் என்று எதிர்பார்க்க முடியாது. அவ்வாறு இடம்பெறுவதற்கான சாத்தியமும் இல்லை.

தெரிவுக்குழுவில் நான் இடம்பெறாவிட்டாலும் எமது நிலைப்பாட்டைக்கொடுள்ள ஆளும் கூட்டணி உறுப்பினர்கள் அதில் உள்ளனர். எனவே எமது கருத்துக்கள் தெரிவுக்குழுவில் ஒலிக்கும் என்றார்.


(மூலம்: http://www.virakesari.lk/article/local.php?vid=5461 )

No comments:

Post a Comment

உங்கள் கருத்துக்கள் வரவேற்கப்படுகின்றன.

ADD TEXT HERE