-லக்மால் சூரியகொட
பயங்கரவாத புலனாய்வுப்பிரிவின் ஓய்வுப்பெற்ற உதவிப்பொலிஸ் அத்தியட்சருக்கு பிணை வழங்கப்பட்டுள்ளது.
ஒரு இலட்சம் ரூபா பெறுமதியான இரண்டு சரீர பிணைகளிலேயே கொழும்பு கோட்டை நீதவான் திலின கமகே அவரை நேற்று திங்கட்கிழமை விடுதலைசெய்துள்ளார். அவருக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட 15 வழக்குகளில் ஏழு வழக்குகளுக்கு அவருக்கு பிணை வழங்கப்பட்டுள்ளதாக அறிவித்துள்ள நீதிமன்றம் அவருக்கு எதிராக மீதமிருக்கின்ற இன்னும் 8 வழக்குகளுக்காக அவர் தொடர்ந்தும் விளக்கமறியலில் இருப்பார் என்றும் நீதிமன்றம் அறிவித்துள்ளது. இந்த வழக்குகளின் 7 வழக்குகளின் பிரகாரம் சந்தேநபரான பயங்கரவாத புலனாய்வுப்பிரிவின் ஓய்வுப்பெற்ற உதவிப்பொலிஸ் அத்தியட்சகர் ஆனந்த ரணசிங்க கனடாவுக்கு அனுப்புவதாக கூறி ஏழு இளைஞர்களிடம் பண மோசடி செய்ததாக குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது. அத்துடன், இன்னும் 15 இளைஞர்களை கனடாவுக்கு அனுப்புவதாக கூறி அவர்களிடமிருந்து 2.6 மில்லியன் ரூபாவை மோசடி செய்ததாக கொம்பனி வீதி மற்றும் கோட்டை ஆகிய பொலிஸ் நிலையங்களில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. அதுமட்டுமன்றி மத்தியவங்கியில் அரசாங்கத்தின் கையிருப்பிலுள்ள தங்கத்தில் 100 கிலோகிராம் தங்கத்தை மோசடியாக பெற்றுக்கொள்வதற்கு முயன்ற குற்றச்சாட்டில் தாக்கல் செய்யப்பட்ட வழக்கில் குறித்த சந்தேகநபர் 6 ஆவது சந்தேநபர் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.
(மூலம்: http://www.tamilmirror.lk/2010-07-14-09-13-23/71261-2013-06-17-15-56-55.html#sthash.kwZgFRYL.dpuf )

No comments:
Post a Comment
உங்கள் கருத்துக்கள் வரவேற்கப்படுகின்றன.