சரீர பிணையில் விடுவிக்குமாறு கொழும்பு நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கொழும்பு-11 குணசிங்கபுரவிலுள்ள கடையொன்றிலிருந்து 800 ரூபா பெறுமதியான பால்மா பக்கற்றொன்றை திருடிய குற்றச்சாட்டை ஒத்துக்கொண்ட மொஹமட் றிஸ்வான் என்பவரே பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார். இவருக்கு எதிராக வழக்கு கொழும்பு பிரதான நீதவான் கிஹான் பிலபிட்டியவின் முன்னிலையில் நேற்று திங்கட்கிழமை விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டபோது சந்தேகநபரை குற்றவாளியாக இனங்கண்ட நீதவான் அவரை 25 ஆயிரம் ரூபா பெறுமதியான சரீர பிணையில் விடுவிக்குமாறு உத்தரவிட்டார்.
(மூலம்: http://www.tamilmirror.lk/2010-07-14-09-13-23/71263-2013-06-17-15-58-16.html#sthash.BfAyzfIw.dpuf )
No comments:
Post a Comment
உங்கள் கருத்துக்கள் வரவேற்கப்படுகின்றன.